மரக்காணம் கள்ளச்சாராய சாவுகள், 2023
2023ஆம் ஆண்டு மே மாதம் நடந்த கள்ளச்சாராய சம்பவத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தில் 14 பேரும், செங்கல்பட்டில் உள்ள சித்தாமூருக்கு அருகில் இருக்கும் பெருக்கரணை, பேரம்பாக்கம் ஆகிய இரு கிராமங்களில் 8 பேர் என மொத்தமாக 22 பேர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர்.[1]
நாள் | மே 15, 2023 |
---|---|
அமைவிடம் | மரக்காணம் விழுப்புரம் மாவட்டம், சித்தாமூர் செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா |
வகை | விசச்சாராயம் |
காரணம் | சாராயத்தில் மெத்தனால் நச்சு |
இறப்புகள் | 22 |
கண்டனம்
தொகுஅதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் இராமதாசு போன்றோர் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அரசின் நிருவாகத்திறமையின்மையை குறைகூறினர்.
எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில், " திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாசாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளதாகவும், மரக்காணத்தில் கள்ளச்சாராய விற்பனையால் மரணங்கள் ஏற்பட்டதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.[2]
ராமதாசு தனது ட்விட்டர் பதிவில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டியது தமிழக அரசின் சட்டப்பூர்வ கடமையாகும். காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரும், மதுவிலக்கு நடைமுறைப்பிரிவினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார்.
நடவடிக்கை
தொகுஇந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காவல்துறை பெண் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகிய மேலும் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.[3]
நிவாரணம்
தொகுதமிழக முதல்வர் மு. க. தாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையும் (நிவாரணம்), சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் அளிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.[4]
எதிர்ப்பு
தொகுகஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருள்கள் என்றால், அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா என்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறும் தி.மு.க அரசு, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத்தவறிவிட்டது என்றும் சீமான் கூறினார்.[5]
கள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டுக்காலச் சாதனையா? என்று கேட்ட சீமான் மரக்காணம் கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அரசு அறிவித்திருப்பதையும் சீமான் கடுமையாக விமர்சித்தார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்காக பத்து லட்சம் , யார் பணத்தில் இந்த 10 லட்சத்தை அறிவிக்கிறீர்கள். இதன் மூலம் கள்ளச்சாராயம் விற்பவர்களை ஊக்குவிக்கிறீர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ மரக்காணம் கள்ளச்சாராய மரணம்: ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை பெண்கள் என்ன செய்தனர்?
- ↑ மரக்காணம் கள்ளச் சாராய உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
- ↑ மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்; தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்'-தமிழக முதல்வர் அறிவிப்பு
- ↑ மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்
- ↑ "கள்ளச்சாராய விற்பனையும் `திராவிட மாடல்' அரசின் ஈடில்லா இரண்டாண்டுக்காலச் சாதனையா?"– சீமான் கண்டனம்!
- ↑ நீங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தரேன்” சீமான் நக்கல் பேச்சு