மரத் தவளை
மரத் தவளை (Tree frog) என்பது தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியினை மரங்களில் செலவிடும் தவளையினைக் குறிக்கின்றது.[1] நியோபாட்ராசியா பரம்பரை தவளைகளின் பல மரத் தவளைகளாக உள்ளன. இருப்பினும் இவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பில்லாமல் உள்ளன.
இவற்றின் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக குவிப்பரிணாம வளர்ச்சி, மிகவும் நெருங்கிய தொடர்பில்லாத உயிரினங்களில் உருவவியல் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.[2]
விளக்கம்
தொகுபெயர் குறிப்பிடுவது போல, இந்த தவளைகள் பொதுவாக மரங்கள் அல்லது மற்ற உயரமான தாவரங்களில் காணப்படுகின்றன. இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடுவதைத் தவிர, இவை பொதுவாகத் தரைக்கு இறங்குவதில்லை, இருப்பினும் சில சிற்றினங்கள், இலைகளில் நுரைக் கூடுகளை உருவாக்குகின்றன. இவை அரிதாகவே மரங்களை விட்டு வெளியேறுகின்றன.
மரத் தவளைகளின் உடல் அளவானது பொதுவாக சிறியவையாக உள்ளது. இதனால் இவை எளிதாக தமது வாழிடமான மரக்கிளைகளில் எளிதில் இடம்பெயர முடியும். சில மரத்தவளைகள் 10 செ.மீ. நீளமுடையதாக இருக்கும் போது நிலத்தவளைகளை ஒப்பிட்டால் இவை நீளமாக மெலிதான உடலுடன் காணப்படும். மரக்கிளைகளை நன்கு பற்றிக்கொள்ளும் பொருட்டு பொதுவாக விரல் மற்றும் கால் நக முனைகளில் நன்கு வளர்ந்த வட்டுகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாகச் சிறந்த இவை சிறந்த பற்றும் திறனைக் கொண்டுள்ளன. கைரோமேண்டிசு மற்றும் ராகொபோரிடே பேரினத் தவளைகள் மிகவும் ஆற்றல் மிக்கவைகளாக உள்ளன. இவற்றில் இரண்டு இரண்டு விரல்கள் எதிர்த் திசையில் செயல்படுவதால் நன்றாகக் கிளைகளைப் பற்றுகின்றன.
குடும்பம்
தொகுமரத் தவளைகள் கீழ்க்கண்ட குடும்பம் அல்லது பேரின உறுப்பினர்களாக உள்ளன.
- கையலிடே என்பது "உண்மையான" மரத்தவளைகள் ஆகும். இவை, இமயமலை, ஆத்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு வடக்கே ஐரோவாசியாவின் மிதமான மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
- இராக்கோபோரிடே அல்லது புதர் தவளைகள், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள வெப்பமண்டலப் பகுதி, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா கிழக்கே லைடெக்கர் கோடு வரை. சில தவளைகள் கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகின்றன.
- சென்ட்ரோலினிடே அல்லது கண்ணாடி தவளைகள்: ஹைலிட்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. இந்த ஒளிஊடுருவக்கூடிய தவளைகள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
- கைப்பெரோலிடே, அல்லது நாணல் தவளைகள், கூர்வாய்த் தவளை குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையன. இவை ஆப்பிரிக்காவில் சகாரா துணைப்பகுதிகளில் காணப்படுகின்றன.
- பூபிசு என்பது மடகாசுரின் நில நச்சுத் தவளையான மாண்டெல்லிடே குடும்பத் தவளைகளிலிருந்து தோன்றிய பேரினமாகும்.
கேலரி
தொகு-
சாம்பல் மரத் தவளை, கைலா வெர்சிகோலர் (கையலிடே), வட அமெரிக்காவிலிருந்து
-
பொதுவான மரத் தவளை, பாலிபெடேட்சு லூகோமைசுடாக்சு, இராக்கோபோரிடே, கிழக்கு ஆசியாவில்
-
பொடி கண்ணாடித் தவளை, கோக்ரானெலா புல்யெராட்டா, கொனடுரசுலிருந்து ஈகுவேடார் வரை
-
பெரிய கண் மரத் தவளை, லெப்டோபெலிசு வெர்மிகுலேடசு, கைப்பேரோலிடே, தான்சானியா
-
வெள்ளை உதடு ஒளிர் கண் தவளை, பூபிசு அல்பிலேப்ரிசு, மாண்டெலிடே, மடகாசுகர்
-
மலபார் மரத் தவளை, பெடோசுடிபெசு டூபெர்குலோசசு, கைபெர்லிடே, இந்தியா
-
மரத் தவளையில் ஒலி, தென் ஜியார்ஜியா, ஐக்கிய நாடுகள், (78 நொடிகள்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Amphibians (2008-04-22). "Tree Frog Info". Animals.howstuffworks.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03.
- ↑ Rowley, Jodi. "Frogs in the trees". The Australian Museum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-01.
நூல் பட்டியல்
தொகு- Richardson, C.; Lengagne, T. (2009). "Multiple signals and male spacing affect female preference at cocktail parties in treefrogs". Proceedings of the Royal Society B: Biological Sciences 277 (1685): 1247–1252. doi:10.1098/rspb.2009.1836. பப்மெட்:20018785.