மரியா வஸ்தி

பாகிஸ்தானிய நடிகை மற்றும் மாடல்

மரியா வஸ்தி (Maria Wasti), (பிறப்பு : ஆகஸ்ட் 14, 1980) [1] ஒரு பாகிஸ்தான் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவர், தற்போது குரோன் மேன் கேல்-பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியில் போல் என்டர்டெயின்மென்ட் என்ற விளையாட்டு நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறார்.[2]

சுயசரிதை தொகு

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

மரியா வஸ்தி தான்சானியாவின் தாருசலாமில் பிறந்தார். தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு முன்பு தனது ஆரம்ப ஆண்டுகளை அங்கேயே கழித்தார். இவர் ரிஸ்வான் வஸ்தி மற்றும் தஹிரா வஸ்தி ஆகியோரின் மருமகள் ஆவார். வஸ்தியின் பெற்றோர், இவரை ஒரு மருத்துவராக வேண்டும் என்று விரும்பினர், இருப்பினும், இவர் பொழுதுபோக்கு துறையில் ஒரு தொழிலைச் செய்ய விரும்பினார்.[3] அந்த நாளில், நாட்டில் செயல்படும் ஒரே தொலைக்காட்சி நிறுவனம், அரசாங்கத்திற்கு சொந்தமான பாகிஸ்தான் தொலைக்காட்சி (பி.டி.வி) மட்டுமே ஆகும். 1990 களின் பிற்பகுதியில், நாட்டின் முதல் தனியாருக்குச் சொந்தமான நிறுவனமாக நெட்வொர்க் டெலிவிஷன் மார்க்கெட்டிங் (என்.டி.எம்) இருந்தது. இது, குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்ட உள்ளடக்கத்தைக் காண்பித்தது. அதனால், மரியா வஸ்தி நடிப்பில் ஆர்வம் காட்டினார்.

முதல் தொலைக்காட்சி நாடகம் தொகு

1990 களின் நடுப்பகுதியில்,[4] பி.டி.வி. லாகூர் மையத்தின் திட்ட மேலாளர் பக்தியார் அகமது இவரை அணுகி, அவரது, சாரா அவுர் அமாரா என்ற நாடகத்தில், திரைப்பட நடிகையான ரேஷமுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த தொலைக்காட்சி நாடகம், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களின் கொந்தளிப்பைக் கடந்து வந்த இரண்டு சகோதரிகள் பற்றிய கதையை எடுத்துக்காட்டுகிறது.[3] பின்னர் அவர் 50 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் அதே எண்ணிக்கையிலான வகைப்படுத்தப்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார்.[5]

ஒரு தொழிலாக நடிப்பு தொகு

நடிப்பில் தனது முதல் அனுபவம் கலையின் ஆர்வத்திற்காக இருந்தது என்று வாஸ்தி நினைவு கூர்ந்தார். ஆனால் பின்னர் அவரது பெற்றோர் ஒரு தொழில்முறை முறையில் வாழ்க்கையைத் தொடர சொன்னார்கள்.[3] அதனால், தனது முதல் நிலைக்குப் பிறகு, பி.டி.வி-க்காக லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் மையங்களில் வஸ்தி பல்வேறு நாடகங்களில் பாத்திரங்களைப் பெறத் தொடங்கினார். அவர் நடிப்பில் இறங்கும்போது மக்கள் சந்தேகம் அடைந்ததை அவர் நினைவு படுத்துகிறார், ஆனால் அவர் தன்னை நிரூபித்தவுடன் அவர்கள் இவரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

பானோ குட்ஸியா மற்றும் கல்லோ [6] என்ற பெயரில் இவர் நடித்த நாடகங்கள், இவரது நினைவு கூறத்தக்க நாடகங்களில் ஒன்றாக உள்ளன.[3] பாட்லன் பர் பசேரா நாடகத்தில், ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் கதா பாத்திரத்தில் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த நாடகத்தில் வரும் ஒரு காட்சியமைப்பு பின்வருமாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மனிதனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வற்புறுத்தப்படுகிறார். தொலைபேசி வழியாகவே அம் மனிதனிடம் பேசும் அப் பெண், முதல்முறையாக அவனைச் சந்திக்கும் போது, அவனின் நிழல்படத்தில் பார்த்ததை விட அந்த மனிதன் வயதானவராக உள்ளார் என்பதை அப்பெண் உணர்ந்தாள்.[7]

வஸ்தி பொதுவாக பாகிஸ்தானில் பெண்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் சம்பந்தப்பட்டதான, அழகற்ற பாத்திரங்களில் நடிப்பதைக் காணலாம். சல்மா முராத் மற்றும் பில்கிஸ் எதி போன்ற முக்கிய பெண்களை சித்தரிக்கும் வேடங்களில் நடித்தார்.[3] பெண்கள் உரிமைகள், துன்புறுத்தல், பாலின சமத்துவம் மற்றும் பாரபட்சம் போன்ற பல்வேறு விஷயங்களில் வெளிப்படையாக பேசப்படுவதற்காக வஸ்தி அறியப்படுகிறார்.[8]

சமீபத்திய முயற்சிகள் தொகு

புதிய பாகிஸ்தானிய நாடகங்கள் இன்றைய பாகிஸ்தானின் பிரச்சினைகளை சித்தரிக்க வேண்டும் என்று வஸ்தி தெரிவித்துள்ளார். மருந்துகள் மற்றும் எய்ட்ஸ் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை என்று அவர் பெயரிடுகிறார்.[3] நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சரியான முறையில் நிதி வழங்கல் இல்லாததே நாடக மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் தரம் குறைவதற்கான காரணமாக வஸ்தி குறிப்பிடுகிறார்.[9]

இந்த எண்ணங்களைக் கருத்தில் கொண்டு, வஸ்தி 2002 இல் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அங்கு இவர் பல தொலைக்காட்சி தொடர்களையும், பன்னிரெண்டு நாடகங்களையும் வெற்றிகரமாக தயாரித்துள்ளார்.[4]

குறிப்புகள் தொகு

  1. "Maria Wasti Celebrates Her Birthday On The Sets Of Salam Zindagi" (in en-US). Reviewit.pk | Celebrities | Entertainment news Portal. 2017-08-11. https://reviewit.pk/maria-wasti-celebrates-birthday-sets-salam-zindagi/. 
  2. [1]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Oh, Maria!". DAWN Newspaper. Archived from the original on May 13, 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
  4. 4.0 4.1 "Playing the field". DAWN Newspaper. Archived from the original on May 20, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
  5. Rendezvous: Maria Wasti
  6. "INSTEP Magazine". Jang.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2012-08-11.
  7. "Maria Wasti's biography". Archived from the original on 2008-06-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-27.
  8. [2] பரணிடப்பட்டது சனவரி 23, 2009 at the வந்தவழி இயந்திரம்
  9. "Interview with Maria Wasti". Scribd.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_வஸ்தி&oldid=3621430" இலிருந்து மீள்விக்கப்பட்டது