மருத்துவன் நல்லச்சுதனார்
மருத்துவன் நல்லச்சுதனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் கிட்டியுள்ள பரிபாடல்களில் ஆறு பாடல்களுக்கு இசையமைத்து அவற்றைப் பாடிவந்தவர்.
பண் | பாடல் எண் | பாடலாசிரியர் | பாடற்பொருள் |
---|---|---|---|
பாலையாழ் என்னும் பாலைப்பண் | 6, 8, 9 | நல்லந்துவனார் | முறையே வையை. செவ்வேள், செவ்வேள் |
பாலையாழ் என்னும் பாலைப்பண் | 10 | கரும்பிள்ளைப் பூதனார் | வையை |
நோதிரம் | 15 | இளம்பெருவழுதியார் | திருமால் |
காந்தாரம் | 19 | நப்பண்ணனார் | செவ்வேள் |
இந்த இசையமைப்பாளர் வேறு. பரிபாடல் பாடிய நல்லச்சுதனார் வேறு எனக் கொள்வதே சான்றுகளின் அடிப்படையில் கொள்வது பொருத்தமானது. பெயர் ஒப்புமை பற்றி ஒருவர் எனல் ஒருவகை ஊகம்.