மருத்துவ உயிரியல்
மருத்துவ உயிரியல் (Medical biology) என்பது உயிரியல் துறையின் ஒரு பிரிவாகும். மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆய்வக நோயறிதலில் நடைமுறை போன்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பல உயிர் மருத்துவ துறைகள் மற்றும் சிறப்புப் பகுதிகள் இத்துறையில் உள்ளடங்கியுள்ளன. இத்துறையுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பொதுவாக "உயிர்" என்ற முன்னொட்டைக் கொண்டு தொடங்கும்.
- மூலக்கூற்று உயிரியல், உயிர்வேதியியல், உயிரி இயற்பியல், உயிரித் தொழில்நுட்பம், உயிரணு உயிரியல், முளையவியல்,
- நானோ உயிரித் தொழில்நுட்பம், உயிர் பொறியியல், ஆய்வக மருத்துவ உயிரியல்,
- உயிரணு மரபியல், மரபியல், மரபணுச் சிகிச்சை,
- உயிர் தகவலியல், உயிர் புள்ளியியல், தொகுப்பியக்க உயிரியல்,
- நுண்ணுயிரியல், தீநுண்மியியல், ஒட்டுண்ணியியல்,
- உடலியங்கியல், நோயியல்,
- நச்சியல், மற்றும் மருத்துவத்துடன் பொருந்தும் வாழ்க்கை அறிவியலுடன் தொடர்புடைய பல துறைகள்.
மருத்துவ உயிரியல் என்பது நவீன சுகாதார பராமரிப்பு மற்றும் ஆய்வக நோயறிதலின் முக்கியமான அடித்தளப் பிரிவாகும். பரந்த அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைகள் இப்பிரிவில் உள்ளன. செயற்கை செல்லில் நோயறிதல் [1][2] முதல் செயற்கை செல்லில் கருத்தரித்தல் வரை, [3] நீர்மத் திசுவழர்ச்சி முதல் மூலக்கூறு வழிமுறை எச்.ஐ.வி வரை, புற்றுநோய் ஆய்வுக்கான மூலக்கூறு இடைவினைகள் [4] முதல் ஒற்றை உட்கரு அமிலமூல பல்லுருத் தோற்றம் முதல் முதல் மரபணு சிகிச்சை வரை அனைத்தும் மருத்துவ உயிரியலில் அடங்கும். மூலக்கூறு உயிரியலை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ உயிரியல் மூலக்கூறு மருத்துவத்தை [5] வளர்ப்பதற்கான அனைத்து சிக்கல்களையும் ஒருங்கிணைக்கிறது.
மனித மரபணு, உயிர்மக்குறிப்பு, புரோட்டியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் பெரிய அளவிலான கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு உறவுகள், நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பங்கள் ஆகியன ஒருங்கிணைப்பில் இடம் பெறுகின்றன. [6]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ In vitro diagnostics
- ↑ In vitro Diagnostics - EDMA பரணிடப்பட்டது 2013-11-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ In vitro fertilization
- ↑ Master, A; Wójcicka, A; Piekiełko-Witkowska, A; Bogusławska, J; Popławski, P; Tański, Z; Darras, VM; Williams, GR et al. (2010). "Untranslated regions of thyroid hormone receptor beta 1 mRNA are impaired in human clear cell renal cell carcinoma". Biochim Biophys Acta 1802 (11): 995–1005. doi:10.1016/j.bbadis.2010.07.025. பப்மெட்:20691260. https://hal.archives-ouvertes.fr/hal-00623298/file/PEER_stage2_10.1016%252Fj.bbadis.2010.07.025.pdf.
- ↑ Molecular medicine - magazine
- ↑ Gene Therapy - New Challenges Ahead
- ↑ Human Genome Project
- ↑ Human Genome Organization