மரூப்ரா, நியூ சவுத் வேல்ஸ்


மரூப்ரா (Maroubra) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியின் கிழக்கே உள்ள கடற்கரை சார் புறநகர்ப் பகுதியாகும். இது சிட்னி மத்திய வணிக மாவட்டத்தின் தென்கிழக்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் ராண்ட்விக் நகர் உள்ளூர் அரசாங்க பகுதியில் அமைந்துள்ளது. மரூப்ரா ராண்ட்விக் நகர சபை நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தொகையிலும் நிலப்பரப்பிலும் மிகப்பெரிய புறநகர் ஆகும்.

மரூப்ரா
சிட்னிநியூ சவுத் வேல்ஸ்

மரூப்ரா கடற்கரை
மக்கள் தொகை: 30,688
அமைப்பு: 1910[1]
அஞ்சல் குறியீடு: 2035
ஆள்கூறுகள்: 33°56′58″S 151°14′37″E / 33.94944°S 151.24361°E / -33.94944; 151.24361
நேர வலயம்:

 • கோடை (பசேநே)

AEST (UTC+10)

AEDT (UTC+11)

உள்ளூராட்சிகள்: ராண்ட்விக் நகர்
மாநில மாவட்டம்: மரூப்ரா
நடுவண் தொகுதி: கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித்

வரலாறு

தொகு
 
மரூப்ரா பிரிவாக்கல் திட்டம், 12 ஜனவரி, 1918, இசட் / எஸ்.பி / எம் 8

மரூப்ரா என்பது உள்ளூர் தொல்குடியின மொழியில் இடியின் இடம் என பொருள்படும். இந்த பகுதியில் முதல் முதலாக 1861 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி மெக்கீன் என்பவரால் ஒரு வீடு கட்டப்பட்டது.[2] அதன் தொடர்சியாக 1870 களில் விரிகுடாவின் வடக்கு முனையில் அமைந்திருந்த கம்பளி தொழிற்சாலைகளில் வேலைக்காக ஏராளமான குடியேளிகள் இந்த பகுதிக்கு வந்தனர்.[3] 1910 களில் மரூப்ரா பிரதேசம் ஒரு முக்கிய குடியிருப்பு பகுதியாக மாறத்தொடங்கியது. குடியிருப்பு மேம்பாட்டாளரான ஹெர்பர்ட் டட்லி அங்கிருந்த நிலத்தை குடியிருப்புத் தொகுதிகளாகப் பிரித்ததைத் தொடர்ந்து அந்த பகுதியின் குடியேற்ற பரம்பல் அதிகரித்தது.[4] [ மேற்கோள் தேவை ]

2005 ஆம் ஆண்டில் இடப்பெற்ற மத்திய கிழக்கு மற்றும் ஆங்கிலோ இளைஞர்களுக்கு இடையிலான குரொனுலா கலவர்த்தில் மரூப்ரா புறநகர் பகுதியும் உள்ளடங்கியிருந்தது.[5] 2006 ஆம் ஆண்டில் மரூப்ரா கடற்கரை தேசிய ரீதியில் அலைச்சறுக்கிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாவது ஆஸ்திரேலிய கடற்கரையாக பிரகடனப்படுத்தப்பட்டது.[6]

 
மரூப்ரா கடற்கரை

போக்குவரத்து

தொகு

சிட்னி நகரின் மத்திய பகுதியில் இருந்து அன்சாக் பரேட் வழியாக கென்சிங்டன், கிங்ஸ்ஃபோர்ட் மற்றும் மூர் பார்க் வழியாக வடமேற்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் மரூப்ரா அமைந்துள்ளது. மரூப்ரா சந்திப்பிலிருந்து சிட்னி நகரத்திற்கு 394, 399, 396 மற்றும் 397 வழித்தடங்கள் உள்ளடங்கலாக வழமையான பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Randwick Council: History பரணிடப்பட்டது 20 சூன் 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. Deaths: McKeon, The Sydney Morning Herald, (Saturday, 29 July 1882), p.1.
  3. The Book of Sydney Suburbs, Compiled by Frances Pollon, Angus & Robertson Publishers, 1990, Published in Australia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-14495-8, page 164.
  4. Maroubra subdivision plan, 12 January 1918, Stanton Auctioneers, State Library of New South Wales Z/SP/M8
  5. Race riots spread to suburbs. Sydney Morning Herald, 12 December 2005
  6. Maroubra beach declared national surfing reserve – ABC World Today