மர்வான் பர்கௌதி
மர்வான் பர்கௌதி (Marwan Barghouti, அரபு மொழி: مروان البرغوثي; பிறப்பு 6 ஜூன் 1959) என்பவர் ஒரு பாலத்தீன அரசியல் தலைவராவார். இசுரேலுக்கு எதிராக நடத்தபட்ட கொடிய தாக்குதல்களில் இவரது பங்கிற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.[1] பாலத்தீன மக்களின் எழுச்சியான முதல் மற்றும் இரண்டாவது இன்டிஃபாதாக்களின் தலைவராக இவர் கருதப்படுகிறார். பர்கௌதி ஒரு காலத்தில் அமைதி முன்னெடுப்பை ஆதரித்தார், ஆனால் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏமாற்றமடைந்தார், ஃபத்தாவின் துணை ராணுவப் பிரிவான டான்சிமின் தலைவராக ஆனார்.[2]
மர்வான் பர்கௌதி | |
---|---|
2001 இல் பர்கௌதி | |
பாலஸ்தீன சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 சூன் 1959 கோபார், யோர்தானிய மேற்குக் கரை |
அரசியல் கட்சி | ஃபத்தா ( 2005 இக்கு முன்பு, 2006–தற்போது) அல்-முஸ்தக்பால் (2005–2006) |
துணைவர் | ஃபத்வா பர்கௌதி |
பிள்ளைகள் | 4 |
பர்கௌதி 1959 இல் மேற்குக் கரையில் உள்ள கோபார் கிராமத்தில் பிறந்தார். 15 வயதில், இவர் ஃபத்தாவில் சேர்ந்தார் மேலும் அதன் இளைஞர் இயக்கத்தை இணைந்து நிறுவினார். அதன் விளைவாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். நான்கு வருட முதல் சிறைவாசத்தின் போது, பர்கௌதி தனது உயர்நிலைப் கல்வியை முடித்தார் மேலும் எபிரேய மொழியில் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். 1983 இல், பர்கௌதி பிர்சீட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார் 1994 இல் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் இளக்கலையும், 1998 இல் சர்வதேச உறவுகளில் முதுகலையும் படித்து முடித்தார். 1984 ஆம் ஆண்டில், பர்கௌதி, பாலஸ்தீனிய கைதிகளுக்காக வதிடும் ஃபத்வா இப்ராஹிம் என்ற சக மாணவியை மணந்தார். அவர் தற்போதைய சிறைவாசத்திலிருக்கும் தன் கணவரின் விடுதலைக்கான முன்னணி பிரச்சாரகராக உள்ளார்.
பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளுக்கு எதிராக தற்கொலை குண்டுவெடிப்பு உட்பட ஏராளமான தாக்குதல்களை திட்டமிட்டு இயக்கியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேலிய அதிகாரிகள் பர்கௌதியை ஒரு பயங்கரவாதி என்று அழைக்கின்றனர்.[3] 2002 இல் ரமல்லாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளால் பர்கௌதி கைது செய்யப்பட்டார்.[1] இவர் மீது கொலை குற்றச்சாட்டில் பேரில் விசாரணை செய்யப்பட்டு, ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டார். மர்வான் பர்கௌதி, தனக்கு எதிராக இசுரேல் நீதிமன்றத்தில் சுமத்தபட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதாட மறுத்து, இந்த விசாரணை சட்டவிரோதமானது என்று தொடர்ந்து என்று கூறிவந்தார். பார்கௌதி சிறைக்குள் இருந்தபடி இன்னும் ஃபத்தாவில் பெரும் செல்வாக்கை செலுத்திவருகிறார்.[4] இவர் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், மஹ்மூத் அப்பாசுக்குப் பின் பாலத்தீன சனாதிபதி வேட்பாளராகும் வாய்ப்புலதாக ஊகங்கள் நிலவுகின்றன.[5]
பிடிபட்ட இஸ்ரேலிய படைவீரர் கிலாத் ஷாலித்திற்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில், இசுரேலுடனான ஒப்பந்தத்தில் அதில் பர்கௌதியையும் விடுவிக்க ஹமாஸ் வலியுறுத்தியது; எனினும், இஸ்ரேல் அந்த கோரிக்கையை ஏற்க விரும்பவில்லை. இசுரேலுக்கும் அமாசுக்கும் இடையே 11 அக்டோபர் 2011 ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இவர் விடுவிக்கப்படப் போகிறார் என்ற தகவல்கள் வந்த நிலையில், அது விரைவில் இசுரேலிய பொறுப்பாளர்களால் மறுக்கப்பட்டது. 2014 நவம்பரில், இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்துமாறு பாலத்தீன தேசிய ஆணையத்தை பர்கௌதி வலியுறுத்தினார். மேலும் இசுரேலுக்கு எதிராக மூன்றாவது இன்டிபாதாவிற்கு அழைப்பு விடுத்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Profile: Marwan Barghouti". BBC News. 26 November 2009. Retrieved 9 August 2011.
- ↑ Bahaa, Sherine (18–24 April 2002). "Israel's enemy number one". Al-Ahram Weekly. No. 582. Archived from the original on 26 September 2009. பார்க்கப்பட்ட நாள் 9 August 2011.
- ↑ "Marwan Barghouti Indictment". Israel Ministry of Foreign Affairs. 14 August 2002. Archived from the original on 5 ஜூலை 2004. பார்க்கப்பட்ட நாள் 29 August 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "An interview with Marwan Barghouti". IMEU. Archived from the original on 30 September 2009. பார்க்கப்பட்ட நாள் 9 July 2010.
- ↑ Mort, Jo-Ann (14 August 2009). "Why a Jailed Dissident Is Palestine's Best Hope". Foreign Policy. Archived from the original on 15 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2024.
{{cite magazine}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Bacchi, Umberto (11 November 2014). "Jailed Palestinian Leader Marwan Barghouti Calls for Third Intifada Against Israel". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.