மறுமலர்ச்சி (1956 திரைப்படம்)
மறுமலர்ச்சி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், ஸ்ரீராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3] இப்படம் 16, நவம்பர், 1956 அன்று வெளியானது.[1] போலி அந்தஸ்த்து, ஆடம்பர வாழ்வு போன்றவற்றால் ஏற்படும் சிக்கல்களை சொல்லுவதாக இந்தப் படம் அமைந்துள்ளது.
மறுமலர்ச்சி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கே. எஸ். பிரகாஷ் ராவ் லங்கா சத்தியம் |
தயாரிப்பு | சி. வி. ரெட்டி ஆனந்தா புரொடக்ஷன்ஸ் |
கதை | டி. பி. தர்மராவ் எஸ். ஏ. சுபராமன் |
இசை | எம். எஸ். சுப்பிரமணியம் |
நடிப்பு | ஸ்ரீராம் எம். என். நம்பியார் லங்கா சத்தியம் ரமணா ரெட்டி சி. எஸ்.ஆஅர். ஆஞ்சனேயாலு ஜி. வரலட்சுமி ஈ. வி. சரோஜா |
வெளியீடு | நவம்பர் 16, 1956 |
நீளம் | 17454 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத்தளத்திலிருந்தும்[1] திரைக்களஞ்சியம் புத்தகத்திலிருந்தும் உள்ள தகவல்களைத் தழுவிய பட்டியல்.[4]
- நடிகர்கள்
- சிறீராம்
- மா. நா. நம்பியார்
- ஈ. ஆர். சகாதேவன்
- நடிகைகள்
- ஜி. வரலட்சுமி
- ஈ. வி. சரோஜா
- டி. எம். மீனாட்சி
தயாரிப்பு
தொகுசி. வி. ரெட்டி தயாரித்த இப்படத்தை கே. எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் லங்கா சத்யம் ஆகியோர் இயக்கினர். கதையை டி. பி. தர்மா ராவும், எஸ். ஏ. சுப்புராமனும் எழுதினர். உரையாடலை எஸ். ஏ. சுப்புராமன் மற்றும் பி. நாகேஸ்வரராவ் ஆகியோர் எழுதியுள்ளனர். ஜாகீர்தார், ஆர். ஆர். சந்திரன், முகுந்தன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். வீரப்பனும், மார்த்தாண்டமும் படத்தொகுப்பை மேற்கொண்டனர். கலை இயக்கத்தை கோட்வாங்கரும், மற்றும் நடனத்தை வேம்பட்டி சத்யமும் கையாண்டார். ஒளிப்படங்களை சத்யம் எடுத்தார்.[1]
இப்படம் தெலுங்கில் மெலுக் கொலுப்பு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.[1]
இசை
தொகுஇப்படத்திற்கு பெண்டியாலா நாகேஸ்வர ராவ் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை எம். எஸ். சுப்ரமணியம் எழுதினார்.[4]
பாடல் | பாடகர்/கள் |
---|---|
"வான வீதிதனில் ஆதவன் உதிக்கிறான்" | டி. எம். சௌந்தர்ராஜன் |
"நானும் ஒரு மனிதனா எனதும் ஒரு இதயமா" | ஏ. எம். இராஜன், பி. லீலா |
"கையும் காலும் நல்லா" | பெண்டியாலா நாகேஸ்வர ராவ் |
"மனமறியாத பேரானந்தம் ஏனோ குதூகலமே" | ஏ. பி. கோமளா, ஜிக்கி |
"தெரிஞ்சாதுக்கெல்லாம்" | கே. இராணி |
"இதுதானா பாரின்" | கண்டசாலா |
"வாதிடுவது உந்தன் தவறுதானா" | பி. லீலா |
"மாலையிதே நல்ல வேளையிதே" | ஏ. எம். இராஜன், ஜிக்கி |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "1956 – மறுமலர்ச்சி – ஆனந்தா புரொ. – மேலுகொலுபு (தெ)". Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ காந்தன் (16 December 1956). "மறுமலர்ச்சி". Kalki. pp. 87–88. Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 12 October 2022.
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
- ↑ 4.0 4.1 Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 114.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)