மலபார் கிறித்தவ கல்லூரி

மலபார் கிறித்தவ கல்லூரி (Malabar Christian College), என்பது 1909-ல் இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோட்டில் நிறுவப்பட்ட பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

மலபார் கிறித்தவ கல்லூரி
குறிக்கோளுரைபாகுபாடு இல்லா கல்வி
வகைஅரசு உதவி
உருவாக்கம்1909; 115 ஆண்டுகளுக்கு முன்னர் (1909)
சார்புகோழிக்கோடு பல்கலைக்கழகம்
முதல்வர்காட்வின் சாம்ராஜ், டி. பி.
அமைவிடம்
எம். சி. சி. குறுக்குச் சாலை
, , ,
673001
,
11°15′51″N 75°46′41″E / 11.2640651°N 75.7779202°E / 11.2640651; 75.7779202
வளாகம்Urban
இணையதளம்Malabar Christian College

வரலாறு தொகு

மலபார் கிறுத்தவ கல்லூரியானது, மலபார் பகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் பாகுபாடு இல்லாமல் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் பேசெல் புராட்டஸ்டன்ட் கிறித்தவ மறைப்பணியாளர்களால் நிறுவப்பட்டது.[1] தொடக்கத்தில் இக்கல்லூரி இரண்டாம்-தரக் கல்லூரியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற கல்லூரியாகச் செயல்பட்டது.[2] 1956 முதல் தரக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

கல்வித் திட்டங்கள் தொகு

இக்கல்லூரியில், கலை மற்றும் அறிவியல் இளநிலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்குகிறது. தற்பொழுது இக்கல்லூரி கோழிக்கோடு பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியாகச் செயல்படுகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று நிறுவனத்தின் "முதல் தரம்" பெற்ற கல்லூரியாக (3.21/4 புள்ளிகள்) அங்கீகாரம் பெற்றுள்ளது.

குறிப்பிடத்தக்க ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_கிறித்தவ_கல்லூரி&oldid=3389704" இலிருந்து மீள்விக்கப்பட்டது