மலாக்கா கலைக்கூடம்
மலாக்கா கலைக்கூடம் மலாய்: Balai Seni Lukis Melaka; ஆங்கிலம்:Malacca Art Gallery; சீனம்:马六甲美术馆) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான கலைக்கூடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]
மலாக்கா ஓவியக் கலைக்கூடம் | |
நிறுவப்பட்டது | 1958 |
---|---|
அமைவிடம் | மலாக்கா மாநகரம், மலாக்கா, மலேசியா |
ஆள்கூற்று | 2°11′29.8″N 102°14′58.3″E / 2.191611°N 102.249528°E |
வகை | கலைக்கூடம் |
சேகரிப்புகள் | ஓவியங்கள்; சிற்பங்கள் |
சேகரிப்பு அளவு | 150 ஓவியங்கள்; 40 சிற்பங்கள் |
பொது போக்குவரத்து அணுகல் | உண்டு |
அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் | இல்லை |
1958-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தக் கலைக்கூடம், கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. முதன்முதலில் 1640-ஆம் ஆண்டுகளில், இடச்சு மலாக்கா அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமாகச் செயல்பட்டது.
தற்போது அதே கட்டிடத்தின் தரைத் தளத்தில் மலேசிய இளைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டு உள்ளது.[2]
பொது
தொகுகலைக்கூடத்தின் நிரந்தரப் பகுதியில் ஏறக்குறைய 150 ஓவியங்கள் மற்றும் 30 சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மலேசியாவின் பிரபல ஓவியர்களான ரபி அப்துல் ரகுமான், வான் உய்-சியு, ரகமத் ரம்லி, ரபி அப்துல் கானி, செகான் சான் போன்றவர்கள் வரைந்த ஓவியங்கள் அந்தக் கலைக்கூடத்தில் சிறப்பு படைப்புகளாக உள்ளன.[3]
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெரார்ட் வான் டென் ஓடெலார் என்பவரின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த ஓவியங்களைத் தவிர, கையெழுத்து கண்காட்சிகள், திரைப்படக் கண்காட்சிகள் போன்ற பிற கண்காட்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The 40 best art galleries in Melaka". Wanderlog. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
- ↑ Chai, Yee Hoong (23 September 2021). "Architecture development in Malaysia: A reflection of hope and progress". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Melaka Art Gallery - The Art Gallery displays works by local artist, both Melakan and from around Malaysia. A large area is devoted to rotating exhibits". Asia for Visitors - Your complete online travel resource for Southeast Asia. பார்க்கப்பட்ட நாள் 14 March 2024.
- ↑ Daniel, Timothy P. (2005). Building Cultural Nationalism in Malaysia: Identity, Representation, and Citizenship. New York: Routledge. pp. 108–109.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Melaka Art Gallery தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.