மலாக்கா செங் கோ கலைக்கூடம்
மலாக்கா செங் கோ கலைக்கூடம் மலாய்: Galeri Laksamana Cheng Ho; ஆங்கிலம்:Gallery of Admiral Cheng Ho; சீனம்: 郑和海军上将画廊; பின்யின்: Zhèng Hé wénwù jìniàn láng) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரத்தில் உள்ள ஓவியக் கலைக்கூடம் ஆகும். சீனா நாட்டின் கடற்படைத் தளபதியும்; நாடுகாண் பயணியுமான செங் கோ (Admiral Cheng Ho) என்பவரின் நினைவாக, மலாக்கா மாநகரில் உருவாக்கப்பட்ட வரலாற்றுக் கலைக்கூடம் என அறியப்படுகிறது.
மலாக்கா செங் கோ கலைக்கூடம் | |
நிறுவப்பட்டது | பிப்ரவரி 2003 |
---|---|
அமைவிடம் | மலாக்கா மாநகரம், மலாக்கா, மலேசியா |
ஆள்கூற்று | 2°11′37.4″N 102°14′56.8″E / 2.193722°N 102.249111°E |
வகை | கலைக்கூடம் |
சேகரிப்புகள் | ஓவியங்கள்; சிற்பங்கள் |
பொது போக்குவரத்து அணுகல் | உண்டு |
அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் | இல்லை |
பிப்ரவரி 2003-இல் திறக்கப்பட்ட இந்தக் கலைக்கூடம், மலாக்கா மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியுடன் தொடர்புடையது.[1][2]
பொது
தொகுதென்கிழக்கு ஆசியாவிற்கான செங் கோவின் பயணங்களை அந்தக் கலைக்கூடம் ஓவியங்கள் மூலமாக காட்சிப் படுத்துகிறது. பன்னாட்டு உறவுகளில் செங் கோ ஒரு மரபு மனிதராகச் சித்தரிக்கப்படுகிறார். அவர் மிங் அரசமரபு அரசியல் உறவுமுறைத் தொடர்புகளை; ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வலுவான முறையில் உருவாக்கி கொடுத்தவராகும்.[3]
மிங் அரசமரபு (Ming dynasty) என்பது 1368 -1644-ஆம் ஆண்டுகளில் சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும். மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத்தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது.[4].
கடற்படைத் தளபதி செங் கோ
தொகுகடற்படைத் தளபதி செங் கோ, உலகின் பெரும்பகுதிகளுக்கு கடற்பயணங்களை மேற்கொண்டுள்ளார். மலாக்கா நீரிணையில் பயணிக்கும் போது மலாக்கா, புலாவ் பெசார் தீவில் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் வரலாற்றுப் பதிவுகளின் மூலமாக அறியப்படுகிறது.
மலாக்கா, புரூணை, ஜாவா, தாய்லாந்து, தென்கிழக்காசியா, இந்தியா, ஆப்பிரிக்கா, அராபியத் தீபகற்பம் முதலான இடங்களுக்குச் சென்ற செங் கோ; சீனாவிற்குப் பெரும் அளவில் திறைச் செல்வங்களை ஈர்த்து வந்தார்.[5]
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ New Straits Times (7 June 2018). "Banking on Melaka booming tourism". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ "Zheng He - Ages of Exploration". exploration.marinersmuseum.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-06.
- ↑ "PERZIM; Galeri Laksamana Cheng Ho". www.perzim.gov.my. Archived from the original on 15 February 2016.
- ↑ Edwin Oldfather Reischauer, John King Fairbank, Albert M. Craig (1960) A history of East Asian civilization, Volume 1. East Asia: The Great Tradition, George Allen & Unwin Ltd.
- ↑ Tamura, Eileen H.; Linda K. Mention; Noren W. Lush; Francis K. C. Tsui; Warren Cohen (1997). China: Understanding Its Past. University of Hawaii Press. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-1923-3.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Gallery of Admiral Cheng Ho தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.