மலாஜ் காண்ட்
மலாஜ் காண்ட் (Malaj Khand), மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பாலாகாட் மாவட்டத்திலுள்ள நகராட்சி ஆகும். இந்தியாவின் செப்புக் குவியல் பண்பாட்டுக் களங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஆசியாவின் பெரிய திறந்தவெளி செப்புச் சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகையில் 36.93% பட்டியல் பழங்குடி மக்கள் ஆவார்.
மலாஜ் காண்ட் | |
---|---|
ஆள்கூறுகள்: 22°1′41″N 80°42′48″E / 22.02806°N 80.71333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | பாலாகாட் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 34,176 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் |
அமைவிடம்
தொகுமலாஜ் காண்ட் நகரம் போபால் நகரத்திற்கு தென்கிழக்கே 488 கிலோ மீட்டர் தொலைவிலும்; நாக்பூருக்கு வடகிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 24 வார்டுகளும், 7,386 வீடுகளும் கொண்ட மலாஜ் கண்ட் நகராட்சியின் மக்கள் தொகை 34,176 ஆகும். அதில் ஆண்கள் 16,907 மற்றும் பெண்கள் 17,269 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1021 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.74% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 76.44% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6.91% மற்றும் 36.93% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.94%, இசுலாமியர் 5.37%, பௌத்தர்கள் 2.33%, கிறித்தவர்கள் 0.93% மற்றும் பிறர் 3.44% ஆகவுள்ளனர்.[1]