மலேசிய அழகி
மலேசிய அழகி என்பது அனைத்துல அளவில் முக்கியமான அலங்கார அணிவகுப்புகள், அழகு அணிவகுப்புகள் அல்லது அழகு ராணிப் போட்டிகளில், மலேசியாவைப் பிரதிநிதிப்பவரைக் குறிப்பிடுவதாகும். அந்த அழகுப் போட்டிகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
- பிரபஞ்ச அழகி (Miss Universe) - இது ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக அழகிப் போட்டி. இதைப் பிரபஞ்ச அழகி அமைப்பு நடத்துகின்றது. (Miss Universe Organization)
உருவாக்கம் | 1963 |
---|---|
வகை | அழகுராணிப் போட்டி |
தலைமையகம் | |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
முக்கிய நபர்கள் | பால் லீ |
வலைத்தளம் | http://www.missworldmy.com/ Miss World Malaysia |
- உலக அழகி (Miss World) - அழகிப் போட்டிகளிலேயே மிகப் பழமையானது. உலக அழகிப் போட்டி ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லே என்பவரால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
- அனைத்துலக அழகி (Miss International) – 1960ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது..
- புவி அழகி (Miss Earth) - ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலகப் போட்டி. நலம் பயக்கும் சுற்றுச் சூழல் தன்மையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அழகிப் போட்டி.
- அனைத்துலகச் சுற்றுலாத்துறை அழகி (Miss Tourism International) ஆண்டுதோறும் மலேசியாவில் D’ Touch International Sdn Bhd Foundation[1] நிறுவனம் நடத்தும் அழகிப் போட்டி.
வரலாறு
தொகுமலேசிய அழகிப் போட்டியை, மலேசிய அழகுராணிப் போட்டி என்றும் அழைப்பார்கள். ஒரு காலகட்டத்தில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விழாக்களில் உலக அழகுராணிப் போட்டியும் ஒரு கலைவிழாவாக நடைபெற்றது. பின்னர், அந்தப் போட்டி மற்ற உலகநாடுகளின் மாநகரங்களிலும் நடைபெறத் தொடங்கியது.
மலேசியாவில் ஒவ்வோர் ஆண்டும், மலேசிய அழகிப் போட்டி நடைபெறுகின்றது. அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர், உலக அழகுராணிப் போட்டியிலும் கலந்து கொள்வார்.[2] இந்தப் போட்டி மிகப் பழைமை வாய்ந்த ஓர் அழகுப் போட்டி ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லே என்பவரால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
ஜூலியா மோர்லே
தொகு2000ஆம் ஆண்டில், எரிக் மோர்லேயின் மறைவிற்குப் பின்னர், அவருடைய மனைவி ஜூலியா மோர்லே என்பவர் அந்த அழகுப் போட்டிக்கு இணைத் தலைவராக இருந்து நடத்தி வருகின்றார்.[3] இந்தப் போட்டி உலகளவில் மிகவும் பரவலாகப் பேசப்படும் அழகுப் போட்டிகளில் ஒன்றாகும்.
உலக அழகிப் பட்டத்தை வென்றவர், உலக அழகி நிறுவனத்திற்காகவும் அதன் பல்வேறு அறப்பணிக்களுக்காகவும் பரப்புரை, விழிப்புணர்வு உரைகள் ஆற்றுவதற்கு கடமை பட்டவர் ஆவார். அந்த ஆண்டு முழுமையும் அவர் உலகெங்கும் பயணிக்க வேண்டும். உலக அழகியாகத் தேர்வு செய்யப்படுபவர் ஓராண்டு காலத்திற்கு லண்டனில் வசிக்க வேண்டியது ஒரு மரபு வழக்கம் ஆகும்.
கடந்த 61 ஆண்டுகளாக மலேசிய அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களின் அழகை மட்டும் பார்க்காமல், அவர்களிடம் புதைந்துள்ள அறிவாற்றலையும் கண்டறிவதே இந்தப் போட்டியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
டத்தோ மிச்சல் இயோ
தொகுமலேசிய அழகு ராணிப் போட்டியில் வெற்றி பெற்ற பலர், கலை, திரைப்பட, கேளிக்கைத் துறைகளில் ஈடுபட்டு புகழின் உச்சிக்குச் சென்றுள்ளனர். அவர்களில் டத்தோ மிச்சல் இயோ[4] குறிப்பிடத்தக்கவர். இவர் 1983ஆம் ஆண்டு மலேசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். Tomorrow Never Dies எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தியப் பெண்களைப் பொருத்த வரையில் ஷீலா சங்கர் 1987, லூசி நாராயணசாமி[5] 1993, பாமேலா ராமச்சந்திரன் 2002, தனுஜா ஆனந்தன் 2009, நடின் தோமஸ் 2010, டெபோரா பிரியா 2011, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
காணொளிகள் தொகுப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "D' Touch International Sdn Bhd, a name synonymous with local and international beauty pageant, started way back in 1989". Archived from the original on 2013-08-10. பார்க்கப்பட்ட நாள் 2013-03-05.
- ↑ Miss Malaysia Pageant has provided many opportunities for young aspiring females in the field of commercial advertising and film.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Miss Julia Morley, wife of Miss World creator, Eric Morley took over in the year 2000 as current Chairman after Eric Morley died in 1951.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bond girl Datuk Seri Michelle Yeoh looks ready to be tied down.
- ↑ "Lucy Narayanasamy, Miss Malaysia Universe 1993". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-05.