மலேசிய சுற்றுலா காவல் துறை
மலேசிய சுற்றுலா காவல் துறை (மலாய்: Polis Pelancong Malaysia; ஆங்கிலம்: Malaysian Tourist Police; சீனம்: 马来西亚旅游警察) என்பது அரச மலேசிய காவல் துறையின் சிறப்புப் பிரிவு ஆகும் அமைப்பாகும். இதன் தலைமையகம் கோலாலம்பூர் மாநகரில் புக்கிட் அமான் வளாகத்தில் உள்ளது.
மலேசிய சுற்றுலா காவல் துறை | |
---|---|
Polis Pelancong Malaysia Malaysian Tourist Police | |
சுற்றுலா காவல் துறை சின்னம் | |
செயற் காலம் | 1985 தொடக்கம் |
நாடு | மலேசியா |
கிளை | படிமம்:Flag of the Royal Malaysian Police.svg அரச மலேசிய காவல் துறை |
பொறுப்பு | சட்ட அமலாக்கம் |
அளவு | பாதுகாக்கப் படுகிறது |
அரண்/தலைமையகம் | புக்கிட் அமான், கோலாலம்பூர் மலேசியா அனைத்து படைத்துறை |
ஆண்டு விழாக்கள் | 25 மார்ச் (காவல்துறை தினங்களின் விழாக்கள்), 31 ஆகஸ்டு (விடுதலை நாள் விழாக்கள்) |
தளபதிகள் | |
காவல்துறைத் தலைவர் | ரசாருடின் உசேன் (Razarudin Husain) |
உள்ளூர்ச் சட்டதிட்டங்கள்; உள்ளூர்ச் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், உள்ளூர்ப் பண்பாடு; மற்றும் உள்ளூர் இடங்கள் பற்றிய தகவல்களை சுற்றுலாப் பயணிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்குவது இந்தத் துறையின் முதன்மை நோக்கமாகும்.[1][2]
பொது
தொகுமலேசிய சுற்றுலா காவல் துறையின் சீருடைகள் அடர் நீல நிறத்திலும்; தொப்பியின் உச்சி வெள்ளை நிறத்திலும் இருக்கும். இடது சட்டைப்பையின் முத்திரைப் பட்டையில் i (information) எனும் எழுத்து பதிக்கப்பட்டு இருக்கும். இது "தகவல்" என்பதற்கான பன்னாட்டுக் குறியீட்டைக் குறிப்பதாகும்.
வரலாறு
தொகுமலேசிய சுற்றுலா காவல் துறை 1985-ஆம் ஆண்டில் அரச மலேசிய காவல் துறையினால் நிறுவப்பட்டது. காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் அந்தத் துறைக்குத் தலைமை தாங்கினார்.
சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்க சுற்றுலா காவல் துறையினர் பெரிதும் உதவினர்.
அமைப்பு
தொகுகோலாலம்பூரில், தினசரி காவல் பணியை மேற்கொள்வதற்கும்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும்; நான்கு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த நான்கு காவல் பணிக் குழுக்கள்:
- நடைக் காவல் குழு - (Walking Patrol)
- விசையுந்து காவல் குழு - (Motorcycle Patrol)
- மிதிவண்டி காவல் குழு - (Bicycle Patrol)
- சுற்றுப்பணி காவல் குழு - (Patrol Car Crew)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Facebook". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ web@tourism-review.org, Tourism-Review org –. "Malaysia's Tourist Police Is Friendly and Fast | .TR". www.tourism-review.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Tourist police தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Royal Malaysian Police official website பரணிடப்பட்டது 2021-04-21 at the வந்தவழி இயந்திரம்
- Welcome Malaysia-Tourist Police information