மலேய சூரிய கரடி

மலேய சூரிய கரடி
பெண் கரடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெலரக்டோசு
இனம்:
கெ. மலேயனசு
துணையினம்:
கெ. ம. மலேயனசு
முச்சொற் பெயரீடு
கெலரக்டோசு மலேயனசு மலேயனசு
(இரபிள்சு, 1821)

மலேய சூரிய கரடி (Malayan Sun Bear) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் சூரிய கரடியின் ஒரு துணையினமாகும்.[1]

வகைப்பாட்டியல்

தொகு

மலேய சூரியக் கரடி முதன்முதலில் 1821ஆம் ஆண்டில் இசுடாம்போர்ட் இராபிள்சு என்பவரால் விவரிக்கப்பட்டது. இவரே சூரிய கரடியை விவரித்து அதன் பெயரை முன்மொழிந்தவர் ஆவார்.[2] மலேய சூரிய கரடி மலேசியா முழுவதும் தனித்துவமான பரவல் காரணமாக இதன் பெயரைப் பெற்றது.

விளக்கம்

தொகு

கரடி குடும்பத்தின் மிகச்சிறிய சிற்றினமாகச் சூரிய கரடி இருந்தாலும், இதன் துணையினமான மலேயக் சூரிய கரடி இன்னும் சிறியது. இதன் அதிகபட்ச நீளம் 1 மீட்டர் (4 அங்குலம்) மற்றும் எடை 35-70 கிலோ ஆகும்.[2] மலேய சூரிய கரடி சூரிய கரடியுடன் மிகவும் ஒத்ததாகத் தோன்றுகிறது. ஆனால் இதன் தங்க-வெள்ளை மார்பு திட்டால் வேறுபடுகிறது. இது சூரிய கரடியை விட மெல்லியதாக இருக்கிறது.[3]

பரவலும் வாழிடமும்

தொகு

மலேய சூரிய கரடி தென்கிழக்கு ஆசியாவில் முக்கியமாகக் கடலோரப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால் சூரிய கரடியை விட குறைவாகவே பரவிக் காணப்படுகிறது. குறிப்பிட்ட இதனுடைய மக்கள் தொகை பின்வருமாறு வாழ்கிறது:[1]

சூரிய கரடியைப் போலவே, மலேய சூரிய கரடியும் மழைக்காடுகளுக்குள் வாழ்கிறது (பசுமையான மற்றும் இலையுதிர் இரண்டும் பல்வேறு உயரங்களில், கடலோர, தாழ் நிலப் பகுதிகள் முதல் 2,000 மீ (6,600 ) க்கு மேல் உள்ள மலைப்பகுதிகள் வரை).[2]

சூழலியலும் நடத்தையும்

தொகு

சூரிய கரடி போலல்லாமல், மலேய சூரிய கரடி முதன்மையாக இரவு நேர விலங்காக உள்ளது. இருப்பினும் இது பகல் நேரத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.[3] இருப்பினும், சூரிய கரடிகளுக்குச் சமமாக, இவை ஆண்டு முழுவதும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் வெப்பமண்டலச் சூழல் காரணமாக மற்ற கரடிகளைப் போல உறங்குவதில்லை.[3]

உணவு

தொகு

சூரிய கரடியைப் போலவே, மலேய சூரிய கரடியும் அனைத்துண்ணி வகையின. பழங்கள், தேன் மற்றும் கொட்டைகளைச் சாப்பிடுகிறது.[4] இவற்றின் உணவில் உள்ள இறைச்சி கறையான்கள், தேனீ இளம் உயிரிகள் மற்றும் வண்டுகளின் இளம் உயிரிகள் ஆகும்.[2] இவை தங்கள் நீண்ட நாக்குகள் மற்றும் நகங்கள் மூலம் இந்த உணவுகளைப் பெறுகின்றன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Malayan Sun Bear". Saint Louis Zoo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  2. 2.0 2.1 2.2 2.3 "Malayan sun bear". Bear Conservation. 18 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-11-14.
  3. 3.0 3.1 3.2 "Malayan Sun Bear". Malaysian Wildlife (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  4. "Malayan sun bear at Belfast Zoo". Belfast Zoo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
  5. "Malayan Sun Bear". Saint Louis Zoo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
  •  Wilson, D. E.; Reeder, D. M., eds. (2005). "Helarctos malayanus malayanus". Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேய_சூரிய_கரடி&oldid=4072125" இலிருந்து மீள்விக்கப்பட்டது