மலையக தேசிய முன்னணி

மலையக தேசிய முன்னணி (Upcountry National Front) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இக்கூட்டணி 2013 சூலை 23 இல் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[1] இதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் ஆவார்.[சான்று தேவை]

மலையக தேசிய முன்னணி
Upcountry National Front
தலைவர்வி. இராதாகிருஷ்ணன்[சான்று தேவை]
தொடக்கம்2013 சூலை 23
தேர்தல் சின்னம்
மண்வெட்டி[சான்று தேவை]
இலங்கை அரசியல்

கூட்டணிக் கட்சிகள்

தொகு

மலையக மக்கள் முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தி. ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் இக்கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளன.[1] இவை நான்கும் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளாகும்.[சான்று தேவை]

குறிக்கோள்

தொகு

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இக்கட்சியின் முக்கிய குறிக்கோளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும், மலையக மக்களுக்கு வீடு மற்றும் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ஆகியவை இக்கூட்டணியின் அடிப்படைக் கோரிக்கைகள்.[2]

தேர்தலில் போட்டி

தொகு

2013 மாகாணசபைத் தேர்தல்களில் இக்கூட்டணி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையக_தேசிய_முன்னணி&oldid=4123142" இலிருந்து மீள்விக்கப்பட்டது