மலை மாங்குயில்

மலை மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. பெர்சிவாலி
இருசொற் பெயரீடு
ஓரியோலசு பெர்சிவாலி
(ஓலிவ் கிராண்ட், 1903)
வேறு பெயர்கள்
  • ஓரியோலசு லார்வேட்டசு பெர்சிவாலி
  • ஓரியோலசு நைக்கிபென்ன்சிசு பெர்சிவாலி

மலை மாங்குயில் (Mountain oriole)(ஓரியோலசு பெர்சிவாலி), ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு முதல் மத்திய கென்யா மற்றும் மேற்கு தான்சானியா வரை காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்

தொகு

மலை மாங்குயில் ஆப்பிரிக்கக் கருந்தலை மாங்குயில் அல்லது கருஞ்சிறகு மாங்குயிலின் துணையினமாக சில வகைப்பாட்டியலாளர்களால் கருதப்படுகிறது. மலை மாங்குயிலின் மாற்றுப் பெயர்களில் கருப்பு வால் மாங்குயில், மாண்டேன் மாங்குயில் மற்றும் பெர்சிவல் மாங்குயில் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Oriolus percivali". IUCN Red List of Threatened Species 2016: e.T22706427A94069149. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706427A94069149.en. https://www.iucnredlist.org/species/22706427/94069149. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_மாங்குயில்&oldid=3831256" இலிருந்து மீள்விக்கப்பட்டது