மல்கர் ராவ் கெயிக்வாட்
மல்கர் ராவ் கெய்க்வாட் (Malhar Rao Gaekwad) இவர் பரோடா மாநிலத்தை 1870 முதல் 1875 வரை ஆட்சி செய்த பதினொன்றாவது மகாராஜா ஆவார். இரண்டாம் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் ஆறாவது மகனான இவர், தனது மூத்த சகோதரர் இரண்டாம் கந்தாராவ் கெய்க்வாட்டின் மரணத்திற்குப் பிறகு பரோடாவின் மகாராஜாவாக ஆனார். [1]
மல்கர் ராவ் கெயிக்வாட் | |
---|---|
பரோடாவின் மகாராஜா | |
மல்கர் ராவ் கெயிக்வாட் | |
பரோடாவின் 11ஆவது மகாராஜா | |
ஆட்சிக்காலம் | 1870 - 1875 |
முன்னையவர் | இரண்டாம் காந்தாராவ் கெயிக்வாட் |
பின்னையவர் | த. மாதவ ராவ் (நடைமுறைப்படி) மூன்றாம் சாயாஜி ராவ் கெயிக்வாட் |
பிறப்பு | 1831 |
இறப்பு | 1882 (அகவை 50–51) |
மரபு | கெயிக்வாட் |
தந்தை | இரண்டாம் சாயாஜி ராவ் கெயிக்வாட் |
மதம் | இந்து சமயம் |
ஆட்சி
தொகுமல்கர் ராவ் தாராளமாக பணத்தை செலவழித்தார். கிட்டத்தட்ட பரோடா பொக்கிஷங்களை காலி செய்தார் (இவர் இரண்டு தங்க பீரங்கி மற்றும் முத்து கம்பளத்தை மற்ற செலவினங்களுக்கிடையில் செய்தார்) இதனால், இவரைப் பற்றிய அறிக்கைகள் அரசப்பிரதிநிதியை அடைந்தன. மேலும், மல்கர் ராவ் தனது செயல்களை மறைக்க பரோடாவில் உள்ள பிரிட்டிசு அரசப்பிரதிநிதியான ஆர்தர் பர்வேசு பைரேவின் சகோதரரான ராபர்ட் பைரே வை, ஆர்சனிக் நஞ்சு வைத்து தனது கொல்ல முயன்றார். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சாலிசுபரி பிரபுவின் உத்தரவின் பேரில், மல்கர் ராவ் 1875 ஏப்ரல் 10 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டு சென்னைக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு இவர் 1882 இல் தெளிவற்ற நிலையில் இறந்தார் [1] [2]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Cahoon, Ben. "Indian Princely States A-J". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
- ↑ Mulhar Rao Gaekwar Maharaja of Baroda, defendant (1875), The trial and deposition of Mulhar Rao Gaekwar of Baroda, Compiled and printed at the Bombay Gazette Steam Press, பார்க்கப்பட்ட நாள் 15 December 2018