மல்லிகார்ச்சுன ராவ் (நடிகர்)
மல்லிகார்ச்சுன ராவ் பீலா (Mallikarjuna Rao Peela) (1951 - 24 சூன் 2008) தெலுங்குத் திரைப்படவுலகின் பிரபல நகைச்சுவை நடிகராவார்.[2] லேடீஸ் டெய்லர் படத்தில் நடித்ததற்காக பட்டாலா சத்தி என்று பிரபலமாக அறியப்பட்டார். தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 375 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். .[3]
மல்லிகார்ச்சுன ராவ் பீலா | |
---|---|
பிறப்பு | 13 திசம்பர்,1951 அனகாபள்ளி, விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 24 சூன் 2008 (aged 57)[1] ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
மற்ற பெயர்கள் | “பட்டாளா சத்தி” |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 28 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நந்தி விருது, பொதுச் செயலாளர், தெலுங்குத் திரைப்பட கலைஞர்கள் சங்கம், தெலுங்கு தேசம் கட்சியின் கலாச்சாரப் பிரிவின் செயலாளர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அனகாபள்ளியில் பிறந்தார். இவருக்கு ஒருமனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.
தொழில்
தொகுமல்லிகார்ச்சுன ராவ் 1973ஆம் ஆண்டில் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வம்சி இயக்கிய லேடீஸ் டைலர் படத்தில் 'பட்டாலா சத்திகாடு' என்ற பாத்திரத்தில் பிரபலமடைந்தார். லேடீஸ் டைலர், ஹலோ பிரதர், தம்முடு, பத்ரி ஆகிய படங்களில் தனது நகைச்சுவை மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
தெலுங்கு நடிகர், எழுத்தாளர் தனிகில்லா பரணியை தனது குருவாக கருதினார். திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். ஐதராபாத்தின் சிறீநகர் குடியிருப்பிலுள்ள வெங்கடேசுவர சுவாமி கோயிலின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தெலுங்குத் திரைப்படவுலகில் மூத்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்.
இறப்பு
தொகுஇவர் குருதிப் புற்றுநோய் காரணமாக 2008 சூன் 24 அன்று ஐதராபாத்தில் இறந்தார்.
நினைவஞ்சலி
தொகுஇவரது இறந்த நாளில், நடிகர் சிரஞ்சீவி, "மல்லிகார்ச்சுன ராவ் ஒரு தனித்துவமான நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதராகவும் இருந்தார். அவர் எப்போதுமே தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ முயன்றார்” என்றார். தெலுங்குத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (எம்.ஏ.ஏ) பொதுச் செயலாளராக இருந்த இவரிடமிடருந்து பல நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த உதவியை நினைவு கூர்ந்தனர். இவர், தெலுங்கு தேசம் கட்சியின் கலாச்சாரப் பிரிவின் செயலாளராகவும் இருந்தார். கட்சியின் தலைவர் நா. சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் ராவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். பிரபல நகைச்சுவை நடிகரின் மறைவுக்கு அபோதைய முதல்வர் எ. சா. ராஜசேகர் ரெட்டியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுகள்
தொகு- "தம்முடு" என்றப் படத்திற்காக சிறந்த கதாபாத்திர நடிகருக்கான நந்தி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archive News". The Hindu. Archived from the original on 2008-06-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Archive News". The Hindu. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Archive News". The Hindu. Archived from the original on 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.