மல்லேஸ்வரன் முடி

கேரள மலை

மல்லேஸ்வரன் முடி (മല്ലേശ്വരന്‍ മുടി) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பழங்குடி வட்டத்தில், அட்டப்பாடி வனச்சரகத்தில் உள்ள ஒரு உயர்ந்த மலை முகடாகும். இந்த முகடு 1,664 மீட்டர் உயரம் கொண்டது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில், அகளி மலைகளில் அமைந்துள்ளது.

மல்லேஸ்வரன் முடி
மேகங்களால் சூழப்பட்ட மல்லேஸ்வரன் மலைகள்.

மல்லேஸ்வரன் கோயிலில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த சிகரத்தை பழங்குடியினர் மிகுந்த பக்தியுடன் பெரிய சிவ லிங்கமாக கருதி வழிபடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லேஸ்வரன்_முடி&oldid=4138692" இலிருந்து மீள்விக்கப்பட்டது