மழநாடு

தமிழ்நாட்டு மண்டலம்
(மழவர் நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மழவர் நாடு அல்லது மழநாடு (Mazhanadu) என்பது தொண்டை நாடு மற்றும் கர்நாடகம் ஆகியவற்றின் இடையே உள்ள நிலப் பகுதியை குறிப்பிடப்படுவதாகும். மழநாடு சேர மரபினரின் கிளைக் குடியினரால் ஆளப்பட்ட பகுதியாகும். மழநாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கும்.[2] பண்டைய சங்க காலத்தில் இப்பகுதியை மழவர் மன்னன் கொல்லி மழவன் ஆண்டான். பிரபல சங்க கால பெண் புலவரான ஔவையார் . தகடூரைச் சேர்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி, கொல்லிமலை வல்வில் ஓரி போன்ற மழவர் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். மழநாடு மேல்மழநாடு (மேற்கு மழநாடு), [3] [4] கீழ்மழநாடு (கிழக்கு மழநாடு) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கீழ்மழநாடு ஒரு காலத்தில் கொல்லி மழவனாலும் அவரது மரபினராலும் ஆளப்பட்டது. கீழ்மழநாடு அதன் நீர் வளத்திற்காக நன்கு அறியப்பட்டதாக ஒரு தமிழ்க் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [5]

மழநாடு
மழவர் நாடு
மண்டலம்
மழநாட்டின் வரைபடம்
சேலம், மண்டலத்தின் பெரிய மாநகரம்.
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பிரிந்தியம்மழநாடு
உள்ளடங்கிய மாவட்டங்கள்சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி
பெரிய நகரம்
அரசு
 • நிர்வாகம்தமிழ்நாடு அரசு, இந்திய அரசு
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்85,95,309
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
620-636xxx
வாகனப் பதிவுTN 24, TN 27, TN 28, TN 29, TN 30,TN 34, TN 45, TN 46, TN 48, TN 52, TN 54, TN 61, TN 70, TN 77, TN 88, TN 90, TN 93

மழநாடு மண்டலம் தொகு

தமிழ்நாட்டில் 'மழநாடு' பகுதியைக் கொண்ட மாவட்டங்களின் புவியியல் மற்றும் மக்கள்தொகை போன்றவை கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வ.எண். மாவட்டங்கள் தலைமையகம் நிறுவப்பட்டது பகுதி (கிமீ²) மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) மக்கள் தொகை அடர்த்தி (/கிமீ²)
1 சேலம் சேலம் நவம்பர் 1, 1956 5,205 3,482,056 [6] 669
2 தருமபுரி தருமபுரி 2 அக்டோபர் 1965 4,497.77 1,506,843 [7] 335
3 நாமக்கல் நாமக்கல் 1 ஜனவரி 1997 3363 1,726,601 [8] 513
4 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 9 பிப்ரவரி 2004 5,143 1,879,809 [9] 366

குறிப்புகள் தொகு

  1. "Census of India". Government of India. 2001. Archived from the original on 12 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2010.
  2. "பண்பாடு வளர்க்கும் பழங்குடிகளின் பூமி: சங்ககாலத்து 'மழநாடு' தான் அரியூர் என்னும் நம்ம அரூர்". www.dinakaran.com. Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  3. "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்". www.thevaaram.org.
  4. "Periyapuranam - Tamil and Vedas". tamilandvedas.com.
  5. ":: TVU ::". www.tamilvu.org.
  6. "Census Info 2011 Final population totals - Salem district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  7. "Census Info 2011 Final population totals - Dharmapuri district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  8. "Census Info 2011 Final population totals - Namakkal district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  9. "Census Info 2011 Final population totals - Krishnagiri district". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழநாடு&oldid=3701815" இலிருந்து மீள்விக்கப்பட்டது