மாங்காய் பானம்
மாங்காய் பானம் ஒரு புகழ்பெற்ற இந்திய பானம் ஆகும்.[1] பச்சை மாம்பழம் மற்றும் மஞ்சள் நிற மாம்பழம் சேர்ப்பதால் இதன் நிறம் வெளிர் பச்சை நிறமாக உள்ளது. இந்திய கோடை வெப்பத்தை தணிக்கும் ஆரோக்கியமான பானம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், புதினா இலைகள் சேர்க்கப்படும் பொழுது இது அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.
பச்சை மாம்பழத்தில் பெக்டின் உள்ளது, இது படிப்படியாக சிறுநீரக கற்களை குறைத்து விடுகிறது. பழுக்காத மாம்பழத்தில் ஆக்ஸாலிக், சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் உள்ளதால் புளிக்கிறது.
மாங்காய் பானம், மாங்காய், இனிப்பு மற்றும் மசாலா பொருள்கள் சேர்த்து தயாரிப்பதால் கோடையில் அதிகப்படியான வியர்வை காரணமாக ஏற்படும் தாகம் தணித்து மற்றும் சோடியம் குளோரைடு மற்றும் இரும்புச்சத்து இழப்பையையும் தடுக்கிறது.[2] வட இந்தியாவில் இரைப்பை கோளாறுகள் சரிசெய்ய இதை பயன்படுத்துகிறார்கள். வைட்டமின் பி1 மற்றும் பி2, நியாசின், மற்றும் வைட்டமின் சி க்கு இது ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. இந்திய கலாச்சாரத்தில் இது ஓர் தெம்பு தரும் பானமாக நம்பப்படுகிறது. காச நோய், இரத்தசோகை, காலரா மற்றும் வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றிற்கெதிரா இது உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aam Panna/Jhora Recipe" இம் மூலத்தில் இருந்து 2021-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211221132216/https://trickymart.com/aam-panna-recipe-of-2022/.
- ↑ Narayanan, Vidhu (2010). "Chapter 11: Circulation and Excretion in Animals". Longman Active Science. Pearson. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-2841-3.