மாசாணியம்மன் கோயில்

மாசாணியம்மன் கோயில் (ஆங்கிலம்: 'Masani Amman) தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் "மாசாணி தேவி" என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில் இந்தியாவிலுள்ள ஆனைமலை, பொள்ளாச்சியில் உள்ளது. [1][2]

பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. தொலைவில், அருள்மிகு மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்புலமாக ஆனைமலைக் குன்றின் பசுமையினைக் காணலாம்.

இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக்கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது..[3][4]

அமைப்புதொகு

இக்கோயிலின் ராஜகோபுரம் வடக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. கருவறையின் கிழக்குப் பக்கத்தில் அம்மன் சுயம்புவாக உள்ளார். பேச்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் உள்ளார்.[5] கோயில் வளாகத்தில்துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.[6]

மூலவர்தொகு

இக்கோயிலின் பிரதான தெய்வமாக மாசாணி அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள மாசாணி அம்மன் சிலை படுத்த வாக்கில் உள்ளது. அம்மனின் தலை முதல் பாதம் வரை 15 அடி நீளம் ஆகும். இக் கோயிலில் உள்ள முக்கியமான பிற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் போன்றவை ஆகும். மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது..[3][4]

தெற்கே தலைவைத்துப் படுத்திருக்கும் அவருடைய திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் ஆகியவை காணப்படுகின்றன. தலையில் ஜுவாலா மகுடத்துடன் மேலே நோக்கியபடி காணப்படுகிறார்.[5]

வரலாறுதொகு

பண்டைய காலங்களில், ஆனைமலை நன்னூர் என்றும், இப்பகுதி நன்னூரால் ஆளப்பட்டது. தனக்குச் சொந்தமான அடர்த்தியான மாந்தோப்பில் இருந்து பழங்களை பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்திருந்தார். ஒரு நாள், ஒரு பெண் இந்தக் தண்டனைகளைப் பற்றி அறியாமல் ஒரு பழத்தை உட்கொண்டாள். பொது மக்களின் வேண்டுகோளை மீறி நன்னூர் அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறார். பின்னர், விஜயமங்கலம் அருகே நடந்த போரில் நன்னூர் கிராம மக்களால் கொல்லப்பட்டார், மேலும் தனது உயிரைத் தியாகம் செய்த பெண்ணை வணங்குவதற்காக ஒரு சன்னதி அமைக்கப்பட்டது. அந்தப் பெண் இறந்ததிலிருந்து, தெய்வம் சுமாசாணி என்று அழைக்கப்பட்டது, இது சமஸ்கிருதத்தில் 'கல்லறை' என்று பொருள்படும். பின்னர், தெய்வம் மசாணி என்று அழைக்கப்பட்டது. [7]

புராணம்தொகு

புராணங்களின்படி, கடவுள் இராமர் தாடகை என்ற அரக்கியைக் கொல்வதற்கு முன்பு மாசாணி தேவியிடம் பிரார்த்தனை செய்ய ஆனைமலைக்கு வந்தார்.

விழாக்கள்தொகு

இக்கோயிலில் மிகச்சிறப்பு பெற்ற விழாவாக பூக்குண்டம் இறங்கும் விழா எனப்படும் தீமிதித்திருவிழா நடைபெறுகிறது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசாணியம்மன்_கோயில்&oldid=3081137" இருந்து மீள்விக்கப்பட்டது