மாதவி கிருட்டிணன்

இந்தியாவைச் சேர்ந்த பிரித்தானிய வேதியியலாளர்

மாதவி கிருட்டிணன் (Madhavi Krishnan) இந்தியாவைச் சேர்ந்த பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பிய வேதியியல் பாடத்தில் இணை பேராசிரியராக உள்ளார். நானோ அளவிலான பொருட்களின் இடஞ்சார்ந்த கட்டுப்பாடு மற்றும் கையாளுதலை அனுமதிக்கும் ஒரு மின்னியல் திரவப் பொறியை மாதவி கண்டுபிடித்தார். இந்த பொறிகள் நோயின் உயிரிச்சுட்டு உணர்திறன் கண்டறிவதற்கு அனுமதித்து ஆரம்பகால நோயறிதலை அனுமதிக்கிறது.

மாதவி கிருட்டிணன்
Madhavi Krishnan
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
திரெசுடன்
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
ஆர்வர்டு யான் ஏ. பால்சன் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
ஆய்வேடுடிஎன்ஏ பகுப்பாய்வு சாதன தொழில்நுட்பத்தில் புதுமைகள் (2004)
விருதுகள்2020 கோர்டே – மோர்கன் பரிசு

சுவாரசியமான இவரது சோதனைகளில் காணப்படும் கிட்டத்தட்ட முழுமையான டிஎன்ஏ நீட்டிப்பு தொலைநோக்கு தொழில்நுட்ப தாக்கங்களை ஏற்படுத்தும், மரபணு பகுப்பாய்வுகளுக்கான ஒரு புதிய வகை நுண்ணிய சாதனங்களை நமக்கு வழங்குகிறது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

மாதவி இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். தனது பட்டப்படிப்பு படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு மரபணு சோதனையில் பணியாற்ற ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உயிரியல் மருத்துவ பொறியியல் மற்றும் வேதியியல் பொறியியலில் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றார். செருமன் நாட்டின் சாக்சனி மாநிலத்தின் தலைநகரமான திரெசுடன் நகரில் மாதவி அலெக்சாண்டர் வான் அம்போல்டு அறக்கட்டளையின் சக உறுப்பினராக இருந்தார். அங்கு இவர் கூழ்ம நானோ துகள்களைப் பிடிக்கவும் டிஎன்ஏவை நீட்டவும் புதிய நுட்பங்களை உருவாக்கினார். [1] 2008 ஆம் ஆண்டில் இவருக்கு மேரி கியூரி சக உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் இங்கிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு மாறினார். [2] இவர் ஆர்வர்டு யான் ஏ. பால்சன் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியில் வருகை தரும் அறிஞராகவும் இருந்தார். [3]

ஆராய்ச்சி மற்றும் தொழில்

தொகு

2012 ஆம் ஆண்டு மாதவி கிருட்டிணன் சுவிட்ட்சர்லாந்து நாட்டின் சூரிச்சு நகரத்தில் உள்ள இ.டி.எச்சு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் இயற்பியல் வேதியியல் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார், அங்கு இவர் இறுதியில் சுவிசு தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு இவர் இயற்பியல் வேதியியல் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். [4]

மூலக்கூறு-நிலை தொடர்புகளை அளவிடுவதற்கும், விளக்குவதற்கும், புரிந்துகொள்வதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் சோதனை, கோட்பாடு மற்றும் உருவகப்படுத்துதலின் கலவையை இவர் பயன்படுத்துகிறார். இவருடைய முக்கிய தற்போதைய ஆர்வம் நிலை மின்னியக்கத்துடன் தொடர்பு கொண்டதாகும். திரவங்களில் வலுவானதாகவும் மற்றும் நீண்ட தூர இரசாயன மற்றும் உயிரியல் அமைப்புகளில் எங்கும் காணப்படுகிறது. மின்சுமையேற்றப்பட்ட மூலக்கூறுகளுக்கு இடையில் பழக்கமான விரட்டும் சக்தியைப் பயன்படுத்தி, ஒற்றை மூலக்கூறுகளை மூன்று பரிமாணங்களில் கரைசலில் நிலைநிறுத்தும் திறனை இவர்கள் குழு கண்டறிந்த்து. இந்த நீண்டகால சோதனை இலக்கை அடைய சமநிலை வெப்ப இயக்கவியலைப் பயன்படுத்துவது என்பது ஒரு நூற்றாண்டு பழமையான முயற்சியின் ஒரு முன்னுதாரண மாற்றமாகும், இது அயனிகளிலிருந்து பெரிய துகள்கள் வரை அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தவும் கையாளவும் வெளிப்புறமாக பயன்படுத்தப்படும் மின்காந்த புலங்களை மட்டுமே நம்பியுள்ளது.

நானோ அளவிலான பொருட்களை இடைநிறுத்த நிலை மின்னியல் திரவ பொறிகளைப் பயன்படுத்தி ஒற்றை மூலக்கூறு படமாக்கலை மாதவி ஆய்வு செய்கிறார். [5] பாரம்பரியமாக, மூலக்கூறு பொறிகளுக்கு வெளிப்புற புலங்கள் தேவைப்படுகின்றன எடுத்துக்காட்டாக அயனிப் பொறிகளையும் ஒளியியல் பிரித்தெடு கருவிகளையும் குறிப்பிடலாம். இவை ஆய்வுக்கு உட்பட்டுள்ள அமைப்புகளை கலக்கி தொந்தரவு செய்யும். [6] புலம் இல்லாத, மின்னியல் பொறியில் மூலக்கூறுகளை ஆராய்வது அறை வெப்பநிலையில் திரவங்களில் உள்ள மூலக்கூறுகளின் அழிவில்லாத பகுப்பாய்வை அனுமதிக்கிறது. [6] இந்த வழியில் மூலக்கூறுகளை ஆய்வது மூலக்கூறு அளவு மற்றும் மின்சுமையைப் புரிந்துகொள்ள இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது. [6]

விருதுகள்

தொகு
  • 2016 இயற்பியல் வேதியியலுக்கான செருமன் நாட்டின் பன்சன் சங்கத்தின் நெர்ன்சுட்-ஏபர்-போடென்சுடீன் பரிசு [7]
  • 2018 ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மானியம் [6]
  • 2020 கோர்டே – மோர்கன் பரிசு [8]

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசுரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Talk Krishnan 07 - ICPWiki". www2.icp.uni-stuttgart.de. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  2. "Madhavi Krishnan / Assistant Professor of Physical Chemistry". www.flow17conference.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  3. "Prof. Dr. Madhavi Krishnan - AcademiaNet". www.academia-net.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  4. "Madhavi Krishnan - Research Guides". research.chem.ox.ac.uk. Archived from the original on 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  5. "Professor Madhavi Krishnan". www.merton.ox.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  6. 6.0 6.1 6.2 6.3 "Assistant professor Madhavi Krishnan receives ERC Consolidator Grant". www.mnf.uzh.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-24."Assistant professor Madhavi Krishnan receives ERC Consolidator Grant". www.mnf.uzh.ch. Retrieved 24 June 2020.
  7. "Nernst-Haber-Bodensteinpreis 2016". www.chem.uzh.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.
  8. "Professor Madhavi Krishnan | Corday-Morgan Prize winner 2020". Royal Society of Chemistry (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-24.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவி_கிருட்டிணன்&oldid=3590979" இலிருந்து மீள்விக்கப்பட்டது