மாதவ் பண்டாரி
மாதவ் பண்டாரி (Madhav Bhandari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக மகாராட்டிர அரசியலில் செயல்பட்டார்.[1] 1980-1990 ஆம் ஆண்டுகளில் பாரதிய சனதா கட்சியில் முழு நேரமாக பணியாற்றினார். பின்னர் 1982-1985 ஆம் ஆண்டு காலத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் ஊடகத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.
மாதவ் பண்டாரி Madhav Bhandari | |
---|---|
பாரதிய சனதா கட்சி செய்தித் தொடர்பாளர், மகாராட்டிரம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
துணைத் தலைவர், சிந்துதுர்க் சில்லா பரிசத்து | |
பதவியில் 1997–2001 | |
உறுப்பினர், கொங்கன் வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு வாரியம் | |
பதவியில் 1996–1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 அக்டோபர் 1954 தேவகடத் தாலுகா, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பிள்ளைகள் | சின்மயி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
தற்போது பாரதிய சனதா கட்சியின், மகாராட்டிர மாநிலத்தின் தலைமை செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசிறுவயதிலிருந்தே இந்து முன்னணியில் ஆர்வமாக சேர்ந்தார், பின்னர் மாணவர் வாழ்க்கையில் அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தில் பணியாற்றினார். 1975 ஆம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து அச்சு ஊடகத்தில் நுழைந்தார். விவேக் (மும்பை) இதழில் கூடுதல் தலைமை ஆசிரியராக இருந்தார்.
தொழில்
தொகுதலைவர் ராவ்சாகேப் தாதாராவ் தன்வே தலைமையிலான பாரதிய சனதாவின் குழுவில் மகாராட்டிர மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாரதிய சனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.
பதவிகள்
தொகுகட்சிக்குள்
தொகு- முழுநேர பணியாளர் (1980–1990)
- செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடகத் தலைவர், பாரதிய சனதா கட்சி (1982-1985)
- அமைப்புச் செயலாளர், கோக்கன் பிரிவு பாரதிய சனதா கட்சி (1980–1982 & 1985–1990)
- தலைவர், சிந்துதுர்க் மாவட்டம், பாரதிய சனதா கட்சி (2003–2005)
- தற்போது தலைமை செய்தி தொடர்பாளர், மகாராட்டிரா பாரதிய சனதா கட்சி[2]
சட்டமன்றம்
தொகு- உறுப்பினர், கொங்கன் வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு வாரியம் (1996–1998)
- துணைத் தலைவர், சிந்துதுர்க் சில்லா பரிசத்து (1997–2001)[3]
- தலைவர், சிந்துதுர்க் சில்லா பரிசத்து (2001) கூடுதல் பொறுப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ "::: Bharatiya Janata Party - Maharashtra :::". Archived from the original on 25 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
- ↑ "மாதவ் பண்டாரி: மாதவ் பற்றிய சமீபத்திய செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பண்டாரி".
- ↑ reli/PUBLICATIONS_files/B_1_2.pdf "இயற்கை வளங்கள் மற்றும் தியோகாட் பிளாக்கில் அவற்றின் மேலாண்மை: போக்குகள், சாத்தியங்கள் மற்றும் பாடங்கள்" (PDF). வளங்கள் மற்றும் வாழ்வாதாரக் குழு. ஜூன் 2001. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2023.
{{cite web}}
: Check|url=
value (help); Check date values in:|access-date=
and|date=
(help)