மாதவ் விநாயக் கிபே

இந்தியப் பேரறிஞர்

சர்தார் மாதவ்ராவ் விநாயக் கிபே (Sardar Madhavrao Vinayak Kibe) (தேவநாகரி : माधव विनायक किबे) (1877 - ?) இவர் இந்தியாவின் இந்தூர் மாநிலத்தைச் சேர்ந்த அறிஞராவார்.[1] மகாராஜா மல்கர் ராவ் ஓல்கருக்கு பிரதம மந்திரி தாந்தியா ஜாக் என்று அழைக்கப்படும் விட்டல்ராவ் மகாதியோ கிபே என்பவரால் நிறுவப்பட்ட கர்கடே பிராமணக் கிபே குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சர்தார் மாதவ்ராவ் கிபே
माधव विनायक किबे
தாய்மொழியில் பெயர்माधव विनायक किबे
பிறப்பு1877
இந்தோர் மாநிலம், இந்தியா
இறப்பு?
இந்தோர்
தேசியம்இந்தியன்
பணிஅறிஞர், தேவாஸின் முதன்மை அமைச்சர், இந்தூரின் சர்தார் என பட்டம் பெற்றவர்
செயற்பாட்டுக்
காலம்
பிரித்தானிய இந்தியா
வாழ்க்கைத்
துணை
கம்லா பாய் கிபே
பிள்ளைகள்இந்திராபாய் பட்காம்கர், சரத் கிபே, சுசிலாபாய் தாண்டேகர், அர்விந்த் கிபே
கல்விப் பணி
Notable worksலங்காவின் இருப்பிடம் மற்றும் இந்திய மாநில நாணயங்கள் குறித்த ஆய்வு

கல்வி

தொகு

இவர் டேலி கல்லூரியில் தேர்ச்சி பெற்ற முதல் பழைய மாணவர் ஆவார். 1899 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டமும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அலகாபாத்தின் முயர் மத்திய கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

வேலை

தொகு

கல்வியை முடித்த பின்னர் இந்தூர் அரசவையின் கௌரவச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இவர் இந்தியாவின் தலைமை ஆளுநரின் முகவர் மற்றும் கௌரவ குற்றவியல் நடுவராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில், தேவாஸின் ராஜா சாஹேபிற்கு திவானாக பணியாற்ற நியமிக்கப்பட்டார். 1912 சூன் மாதத்தில் இவர் ராவ் பகதூர் ஆனார். [2]

1926 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற மராத்தி இலக்கிய மாநாட்டில் தலைமை வகித்தார். இவர் தனது துணைவியுடன் [இலண்டன்|இலண்டனில்]] நடந்த வட்ட மேசை மாநாட்டிலும் கலந்து கொண்டார். இவரும் இவரது மனைவியும் காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தனர்.

இலங்கைவின் இருப்பிடம் மற்றும் இந்திய மாநில நாணயங்கள் குறித்த ஆய்வு ஆகியவை இவரது படைப்புகளில் இரண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

சர்தார் மாதவ்ராவ் கிபே விட்டல்ராவ் கிபே என்பவருக்குப் பிறந்தார். கிபேக்கள் என்பவர்கள் ஜாகிர்தாரர்கள் மற்றும் சாஹுகாரர்கள் ஆவர். இந்த சொல் ஓல்கர் கா ராஜ் அவுர் கிபே கா பைஜ் என்ற வழக்காக இருந்து வருகிறது. இவர் ஒரு குறிப்பிடத்தக்க சமூக சேவையாளராக இருந்த கம்லாபாய் கிபேவை மணந்தார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் இந்திராபாய் இந்திய குடிமைப்பணிகள் அதிகாரியான பாலி கிருட்டிணா வாசுதேவ் பட்காம்கரை மணந்தார். இவரது மகன் சரத் கிபே குருந்த்வாரைச் சேர்ந்த பட்வர்தன் இளவரசி சகுந்தலா பாய் கிபேவை மணந்தார். இவரது இளைய மகள் இந்திய குடிமைப்பணி அதிகாரி நாராயண் தண்டேகரை மணந்தார். இவரது பேத்தி லயலா ராஜே பட்வர்தன் ஜம்கண்டியின் ராஜமதா ஆவார். இவரது பேரன் அசோக் பட்கம்கர் இந்திய தூதராக இறந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. The Calling of History: Sir Jadunath Sarkar and His Empire of Truth.
  2. Rai Bahadur Prag Narain Bhargava, ed. (1914). Who's Who in India, second Supplement. Newul Kishore Press, Lucknow. p. 33.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ்_விநாயக்_கிபே&oldid=3074172" இலிருந்து மீள்விக்கப்பட்டது