மாதாபனந்தா கோயில்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ளது

மாதாபனந்தா கோயில் (Madhabananda Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக் மாவட்டத்தில் இருக்கிறது. இதை மாதாபநந்தா மடம் என்ற பெயராலும் அழைக்கின்றனர். மாமனிதர் மாதபனந்தாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயில் பசுக்களுக்கு சிகிச்சையளித்து சிறப்பாக குணப்படுத்துவதில் பிரபலமானதாகும். கட்டாக் மாவட்டத்தில் சாலிப்பூர் பகுதியின் பாகுகிராமுக்கு அருகிலுள்ள பாகா-கோபிநாத்பூர் கிராமத்தில் இது அமைந்துள்ளது. [1]

மாதாபனந்தா கோயில்
Madhabananda Temple
மாதாபனந்தா கோயில் is located in ஒடிசா
மாதாபனந்தா கோயில்
ஒடிசாவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:கட்டக்
அமைவு:கோபிநாத்பூர் ஊர், சாலிப்பூர்
ஆள்கூறுகள்:20°30′47″N 86°02′16″E / 20.51306°N 86.03784°E / 20.51306; 86.03784
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கலைவடிவம்

அமைவிடம் தொகு

கட்டாக் நகருக்கு கிழக்கில் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் மாதாபனந்தா கோயில் அமைந்துள்ளது. 9ஏ என்று எண்ணிடப்பட்ட சகத்பூர்-சாலிப்பூர்-பட்டமுண்டாய்-சந்தபாலி மாநில நெடுஞ்சாலையில் 4.5 கிலோமீட்டர் தொலைவு பயணித்தும் இக்கோயிலை அடையலாம். சதேசுவர் கோயிலிலிருந்து இக்கோயில் 1.8 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் கபிலாசு சாலை சந்திப்பு ரயில் நிலையமாகும். இது 7 கிமீ தொலைவில் உள்ளது. சகத்பூர் ரயில் நிலையம் 16 கிமீ தொலைவிலும் கட்டாக் சந்திப்பு ரயில் நிலையம் 21 கிமீ தொலைவிலும் உள்ளன. 48 கி.மீ தொலைவில் பட்நாயக் விமான நிலையம் புவனேசுவரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Chhota Mora Gaan Ti - GOPINATH PUR". Latest Odisha News, Events, Tourism, Odisha Jobs, Odia Recipes. பார்க்கப்பட்ட நாள் 2020-09-01.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதாபனந்தா_கோயில்&oldid=3192746" இலிருந்து மீள்விக்கப்பட்டது