மாதா தாலுகா
மாதா தாலுகா (Madha Taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் ஒன்றாகும். [1] இதன் நிர்வாகத் தலைமையிடம் குர்துவாடி நகரத்தில் உள்ளது. இத்தாலுகா மாதா எனும் நகராட்சி மற்றும் 116 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. 1523.86 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 213 பேர் வீதம் வாழ்கின்றனர்.[2]
மாதா தாலுகா | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
தலைமையிடம் | குர்துவாடி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,523.86 km2 (588.37 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,24,027 |
• அடர்த்தி | 213/km2 (550/sq mi) |
• பாலின விகிதம் | 922 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MH |
வருவாய் கிராமங்கள் | 116 |
குறுவட்டங்கள் | 7 |
சராசரி ஆண்டு மழைப்பொழிவு | 519 மி மீ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 66795 வீடுகளைக் கொண்ட மாதா தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 3,24,027 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 169430 மற்றும் பெண்கள் 154597 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 39646 - 12.24% ஆகும். சராசரி எழுத்தறிவு ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 14.44% மற்றும் 0.78% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.79%, இசுலாமியர்கள் 4.59%, பௌத்தர்கள் 0.34%, சமணர்கள் 0.94%, கிறித்துவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.12% ஆக உள்ளனர்.[3]