மாநாடு (Conference) என்பது ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பற்றி "ஆலோசிக்கும்" மக்களின் சந்திப்பாகும். மாநாட்டின் வகைகள் பின்வருமாறு:

ஜோசப் ஸ்டாலின் மற்றும் விளாதிமிர் லெனின் ஆகியோருக்கு இடையே 1905 ஆம் ஆண்டு தம்பேரில் நடந்த சந்திப்புக் கூட்டம் பற்றிய முதல் கலைப்படைப்பு.

வகைகள்

தொகு
  • கல்வி மாநாடு, அறிவியல் மற்றும் கல்வியில், ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள், பட்டறைகள் மற்றும் பிற செயல்பாடுகள் நிகழும் ஒரு நிகழ்வு.
  • தடகள மாநாடு, போட்டியல் கலந்து கொள்ளும் அணிகளின் கூட்டம்.
  • எழுத்தாளர் மாநாடு, மாநாடில் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துப் படைப்புகளை ஆய்வு செய்வதற்கும் மேம்பாடுகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்கும் கூடுகிறார்கள்
  • கூட்டுத் தொலைபேசி மாநாடு, தொலைத்தொடர்புகளில், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட தொலைபேசி அழைப்பு
  • மாநாட்டு அரங்கம், மாநாடுகள் நடைபெறும் மண்டபம்
  • மாநாடு (சந்திப்பு), ஒரு குறிப்பிட்ட துறையின் தனிநபர்கள், அல்லது நிறுவனங்களின் கூட்டம், பொதுவாக பெரிய கூட்டம்
  • கூட்டுக் கூட்டம் இரு அவைகள் சேர்ந்த கூட்டுக் கூட்டம்
  • பத்திரிகையாளர் மாநாடு, அறிவிக்கப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றிய கேள்விகளை எதிர்நோக்கி ஊடகங்களை (அச்சு, வானொலி, தொலைக்காட்சி) அழைக்கும் ஒரு கூட்டடம்
  • பெற்றோர் ஆசிரியர் மாநாடு, வகுப்புகள் மற்றும் பள்ளி செயல்திறனைப் பற்றி விவாதிக்க குழந்தைகளின் ஆசிரியருடனான பெற்றோரின் சந்திப்பு
  • அமைதி மாநாடு, மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கூட்டப்படும் இராஜதந்திர கூட்டம்
  • தொழில்முறை மாநாடு, குறிப்பிட்ட விசயங்கள் குறித்தோ அல்லது அதன் முன்னேற்றங்களைக் குறித்தோ அதைக் கையாள்பவர்கள் அல்லது தொழில் நிபுணர்களின் கூட்டம்
  • தீர்வு மாநாடு, ஒரு வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதிக்கு இடையேயான ஒரு சந்திப்பு. அவர்கள் வழக்கு விசாரணைக்கு செல்லாமல் தங்களுக்கிடையிலான பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்ள செய்யப்படும் ஒரு முயற்சி
  • கட்சி மாநாடு ஒரு அரசியல் கட்சியின் சார்பில் அதன் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், முக்கிய முடிவுகளை அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் மாநாடு
  • மொழி ஆராய்ச்சி மாநாடு ஒரு மொழியின் அறிஞர்கள் கூடி தங்கள் அறிக்கைகளை சமர்பித்து அதுகுறித்து உரையாடும் மாநாடு
  • வர்த்தக கண்காட்சி, அல்லது வர்த்தக மாநாடு

மெய்நிகர்

தொகு
  • காணொளி மாநாடு பல்வேறு இடங்களில் இருப்பவர்கள் ஒலி-காணொளி சமிக்ஞைகளின் வாயிலாக ஒன்று கூடி தங்கள் கருத்துகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒரு மாநாடு

இதையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநாடு&oldid=3247750" இலிருந்து மீள்விக்கப்பட்டது