மாநில அருங்காட்சியகம், போபால்

மாநில அருங்காட்சியகம், போபால் (State Museum, Bhopal) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சியாமளா மலையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.[1] இதன் வடிவமைப்பு மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சிறந்த கலை மற்றும் கலாச்சாரத்திற்காகப் பிரபலமானது. போபாலின் நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.[2]

மாநில அருங்காட்சியகத்தின் உள்ளிருந்து காட்சி

வரலாறு தொகு

இந்த அருங்காட்சியகம் 1964-ல்[2] நிறுவப்பட்டது. இதன் புதிய கட்டிடம் 2 நவம்பர் 2005 அன்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானால் திறந்து வைக்கப்பட்டது.[3] இந்தக் கட்டிடம் கட்டிடக்கலை அதிசயமாக உள்ளது. மாநில கலாச்சாரத்தின் சிறந்த கலை அருங்காட்சியகமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

அமைப்பு தொகு

 
அருங்காட்சியகத்தில் 5 தலை விநாயகர் சிற்பம்

இந்த அருங்காட்சியகத்தில் 16 காட்சியகங்கள் உள்ளன. இவை கருப்பொருளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3] அருங்காட்சியகத்தில் உள்ள காட்சியகங்கள், தோண்டப்பட்ட பொருட்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள், உடைகள், அரச சேகரிப்புகள், சிற்பங்கள், ஆவணங்கள், சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கலைப்பொருட்கள், தபால் தலைகள், கையெழுத்துக்கள், மார்பளவுத் தோற்றச் சிற்றோவியங்கள், நாணயங்கள், படைக்கருவிகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றுடன் வரலாற்றுக்கு முந்தைய கட்டுரைகள் மற்றும் புதைபடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன.[3]

1840ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் முதல் தபால் தலையான பென்னி பிளாக் தபால் தலை சேகரிப்பில் உள்ளது.[1] இந்த அருங்காட்சியகத்தில் 8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்களும் உள்ளன. கறுப்பு பளிங்குக்கல் புத்தர் மற்றும் கிமு 200-ல் இருந்த யக்ஷிகளின் சிற்பங்களும் உள்ளன.

இங்கு 12ஆம் நூற்றாண்டில் மால்வாவின் தார் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சுமார் 80 ஜெயின் வெண்கலங்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது. தார் மாவட்டம் மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது.[4]அருங்காட்சியகத்தின் மற்றொரு சிறப்பம்சம் 6 முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான கல் சிற்பங்களின் சேகரிப்பு ஆகும். ஒன்பது பாறையில் வெட்டப்பட்ட புத்த நினைவுச்சின்னங்களின் தொகுப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[4]

கண்ணோட்டம் தொகு

  • மத்தியப் பிரதேசத்தின் மாநில அருங்காட்சியகம், இந்தியாவின் சிறந்த வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு இயற்கை ஒளியினால் ஒளியூட்ட வடிவமைக்கப்பட்ட ஒரு சமகால கட்டிடம் சாய்தளத்துடன் அணுகக்கூடிய பரந்த இடங்களை உள்ளடக்கியது.[2] இந்த அருங்காட்சியகம் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளைக் காட்டுகிறது. பிரதான கட்டிடத்தின் உள்ளே, 16 கருப்பொருள் காட்சியகங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய கட்டுரைகள் மற்றும் தொல்லுயிர் எச்சம், ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள், இராணுவ ஆயுதங்கள், பண்டைய துணி, நாணயங்கள் மற்றும் ஆயுதங்கள், அரச குடும்பங்களின் கலைப்பொருட்கள் மற்றும் கட்டுரைகள். இவை அனைத்தும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடையன என்று கூறப்படுகிறது.[3]
  • இந்த அருங்காட்சியகத்தில் பாக் குகைகளிலிருந்து அழிக்கப்பட்ட புத்த ஓவியங்கள் மறுவடிவமைப்புடன் 8 மற்றும் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 84 அரிய சமண வெண்கல பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் மகாபாரதம் மற்றும் இராமாயண நிகழ்வுகளுடன் கூடிய சில சிறிய ஓவியங்களும் உள்ளன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Museums of Bhopal". Outlook Traveller (in அமெரிக்க ஆங்கிலம்). 20 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  2. 2.0 2.1 2.2 "State Museum Bhopal in Bhopal, Madhya Pradesh, India - get details, & find more attractions to visit nearby". Travalour (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Department of Archaeology, Archives, and Museums; Government of Madhya Pradesh". www.mparchaeology.org. 2008-08-28. Archived from the original on 28 August 2008. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  4. 4.0 4.1 Anil Mulchandani (11 December 2015). "State Museum". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.