மானவீரப்பட்டினம்

மானவீரப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 875க்கு முன்னரே அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. அக்கால கடற்கரை துறைமுகங்கள் அனைத்தும் பட்டினங்கள் என்றே அழைக்கப்பட்டாலும் அவற்றுள் சிலவற்றுக்கு வேறு பெயர்களும் இருந்தன. அதன்படி இதன் மற்றொரு பெயர் மருதூர் ஆகும். அக்காலத்தில் இது அகநாடுகளுள் ஒன்றான மானவீரவளநாட்டின் ஒரு பகுதியாகும். தற்போது இது சாத்தான்குளம் வட்டம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் பட்டினம் என்னும் பெயருடன் அழைக்கப்பட்ட ஊர்களில் இது மிகப் பழமையானது.[1]

மூலம் தொகு

  • பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.

மேற்கோள்கள் தொகு

  1. தென் இந்திய கல்வெட்டுகள் 14/16 அ

உசாத்துணை தொகு

  • தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார், தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானவீரப்பட்டினம்&oldid=1291725" இலிருந்து மீள்விக்கப்பட்டது