மானவ் தேபர்மா

இந்திய அரசியல்வாதி

மானவ் தேபர்மா (Manav Debbarma) என்பவர் திப்ரா அரசியல்வாதி ஆவார். இவர் திரிபுராவின் சட்டமன்ற உறுப்பினாராக உள்ளார். தேபர்மா திரிபுராவின் கோலாகட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து திரிபுரா சட்டமன்றத்திற்கு 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2]

மானவ் தேபர்மா
Manav Debbarma
உறுப்பினர் திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்பைரேந்திர கிசோர் தேபர்மா
தொகுதிகால்கட்டி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சனவரி 1981 (1981-01-03) (அகவை 43)
அரசியல் கட்சிதிப்ரா மோதா கட்சி
கல்விமருந்தியல் பட்டயம்
முன்னாள் கல்லூரிபிராந்திய மருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அகர்தலா
தொழில்அரசியல்வாதி

இளமை தொகு

மானவ் தேபர்மா 10 சனவரி 1982 அன்று திரிபுராவின் தகர்ஜாலாவில் பிறந்தார். இவர் செபகிஜாலா மாவட்டத்தில் திப்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தேபர்மா அகர்தலாவில் உள்ள மருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பிராந்திய நிறுவனத்தில் மருந்தியலில் பட்டயப்படிப்பினை முடித்துள்ளார்.

தேபர்மா 1995 முதல் 1996 வரை திப்ரா மாணவர் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை தொகு

தேபர்மா 2019-ல் திப்ரா மோதா கட்சியில் சேர்ந்தார். இவர் 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் கோலாகாட்டியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியின் இமானி தேபர்மாவை விட 9198 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. {{cite web}}: Empty citation (help)
  2. "Golaghati Election Result 2023 LIVE: Golaghati MLA Election Result & Vote Share - Oneindia".
  3. Afsar, Ali (2023-03-02). "Golaghati Election Result 2023 Live Updates: TIPRA Wins This Tripura Seat" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானவ்_தேபர்மா&oldid=3816586" இலிருந்து மீள்விக்கப்பட்டது