மானாமதுரை வீர அழகர் கோயில்

மானாமதுரை வீர அழகர் கோயில் அல்லது சுந்தரராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள ஒரு திருமால் கோயிலாகும்.

வீர அழகர் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):வானரவீர மதுரை
பெயர்:அழகர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:மானாமதுரை
அமைவு:தமிழ் நாடு, இந்தியா
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:ஆடி மாத பௌர்ணமியன்று தேரோட்டம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

கோயில்தொகு

மானாமதுரையில் உள்ள இந்தக் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் கிழக்குநோக்கி வீர அழகர் திருமுக மண்டலம் கொண்டு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். அவருடன் நிலமகளும் திருமகளும் காட்சி தருகின்றனர். செளந்தரவல்லித் தாயார் எனும் பெயரில் மகாலட்சுமி இங்கு உள்ளார். பெருமாளின் வலப்புறம் ஆழ்வார்கள் சேவை சாதிக்கிறார்கள். தென் திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீர அனுமன் உள்ளார்.

தொன்மவியல்தொகு

இக்கோயில் தோற்றம்பற்றி நிலவும் கதைப்படி மாவலி வானதிராயன எனும் மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ஓர் எலுமிச்சப்பழத்தை இரண்டாகப் பிளந்து வீசும்படியும், அதன் ஒருபாகம் விழும் இடத்தில் தனக்கு ஒரு கோயிலையும், மறுபாகம் விழுந்த இடத்தில் திருக்குளத்தையும் அமைக்கும்படியும் கூறினார். அதன்படியே மன்னன் செய்தான். இங்கிருக்கும் திருக்குளம் நூபுர கங்கை என அழைக்கப்படுகிறது. திருக்குளத்தின் நீர் எலுமிச்சைச் சாறு போல அமிலத் தன்மையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விழாக்கள்தொகு

மதுரையில் நடப்பது போலவே இங்கும் 10 நாள் சித்திரைத் திருவிழா நடக்கிறது. மதுரையில் மீனாட்சி என்றால் மானாமதுரையில் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர் என்றால் இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவரைப்போலவே மானாமதுரையில் வீர அழகர் எழுந்தருள்கிறார். வீர அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் மதுரையில் நடப்பதுபோலவே இப்பகுதி மக்களாலும் செய்யப்படுகிறது.[1] ஆடி பவுர்ணமியன்று தேர்த்திருவிழா நடக்கிறது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. ஸ்ரீபுரம் சுப்ரமணியன் (2018 ஏப்ரல் 26). "மானாமதுரையில் வீர அழகர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 21 சூன் 2018.
  2. "அருள்மிகு விர அழகர் திருக்கோயில்". கட்டுரை. தினமலர். பார்த்த நாள் 21 சூன் 2018.