மானு

இந்திய நடிகை, நடனக் கலைஞர்

மானு (Maanu) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் சரணின் காதல் மன்னன் (1998) திரைப்படத்தின் மூலமாக நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். மேலும் ஒரு நடனக் கலை நிறுவனத்தைத் துவக்கி ஆர்வத்துடன் உலகளவில் நடனக் குழுக்களில் இடம்பெற்று ஒரு கலைஞராக தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார். 2011 ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவிலிருந்து மீட்க உதவியபோது இவர் மீண்டும் ஊடகப் பார்வைக்கு வந்தார். [1] [2]

மானு
பிறப்புகிருஷ்ணாக்சி சர்மா
23 சூலை 1978 (1978-07-23) (அகவை 45)
இந்தியா, அசாம், குவகாத்தி
பணிநடிகை, நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1998; 2014

தொழில் தொகு

மானு அசாமின் குவகாத்தியில் பிறந்து வளர்ந்தார். இவர் 4 வயதிற்குள் நடனமாடத் தொடங்கினார். 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் முறையே குருமோனி சின்ஹா சிங், குரு அரபிந்தா கலிதா மற்றும் குரு ஹஜுவாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மணிப்புரியில் பிஷாரத் மற்றும் கதக் நடனத்தைப் பயின்று முடித்தார். பின்னர் இவர் பரதநாட்டியத்தில் விரிவாகப் பயிற்சியளிபெற்றார். மேலும் 1995 ஆம் ஆண்டில் தனது குருவான பத்மா ஹர்கோபாலின் மேற்பார்வையில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். தேசிய அளவிலான நடன சுற்றுப்பயணத்தை துவக்கிய பின்னர், நடனத்தின் மீதான இவரது ஆர்வம் தனஞ்சயன்களிடம் பயிற்சி பெற சென்னைக்கு இழுத்து வந்தது. [3] ஒரு நடன நிகழ்ச்சியின் போது இவரைப் பார்த்த, நடிகர் விவேக் அதன் பிறகு இவரை இயக்குனர் சரணுக்கு பரிந்துரை செய்தார், பின்னர் சரண் தான் இயக்குனராக அறிமுகமான காதல் மன்னன் (1998) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை வழங்கினார். துவக்கத்தில் மானு இந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால் இவரது பெற்றோரின் சம்மதத்திற்குப் பின்னர் ஆறு மாதங்களுக்குப் பிறகு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். படம் வெற்றி அடைந்தபோதிலும், மானு ஒரு நடிகையாக தன் பணியைத் தொடர விரும்பவில்லை. மேலும் தனது சொந்த நடன நிறுவனமான மானு ஆர்ட்ஸை அமைத்தார். உலகளவில் நடனக் குழுக்களுடன் பங்கேற்றார், சிவகாமி, லிவிங் ட்ரீ, மாதவி , கொஞ்சும் சலங்கை போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முன்னணிக் கலைஞராக இருந்தார்.

திருமணமான பிறகு, இவர் சிங்கப்பூருக்குச் சென்று வாழத் துவங்கினார். 2011 ஆம் ஆண்டில் சிங்கையில் குருஷேத்ரம் என்ற பெயர் கொண்ட ஒரு சிங்கப்பூர் திரைப்படத்தை பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது சிங்கப்பூரில் ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். சிங்கையில் குருஷேத்ரம் படத்தின் தயாரிப்பாளர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக இருந்தார். இதனால் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோது நடிகரை கவனித்துக்கொள்ளுமாறு அவர் மானுவிடம் கேட்டுக் கொண்டார். [4] அதே ஆண்டில், இலங்கையில் படப்பிடிக்கப்பட்ட எழுதாதாத கதை என்ற தொலைக்காட்சிப் படத்துக்காக இவர் படப்பிடிப்பில் ஈடுபட்டார். இவரது கணவர் சந்தீப் துரா, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், கொழும்பில் உள்ள ஒரு மருத்துவ முகாமில் பணிபுரிந்தார். இயக்குனர் கே. பாலசந்தர், ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்ட சென்னை, பீஷ்மா, தி கிராண்ட்ஸைர், தி பிதாமாகா ஆகிய மேடைத் தயாரிப்புகளை அரங்கேற்ற உதவினார். இவர் தனது இரண்டாவது தமிழ் படமான என்ன சத்தம் இந்த நேரம் (2014) இல் தான் நடிப்புக்கு அறிமுகமான பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தாயின் பாத்திரத்தில் நடித்தார். படத்தின் இயக்குனர் குரு ரமேஷ் திரைக்கதையை இவரிடம் கூறினார். ஆனால் இவர் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று ஆரம்பத்தில் அவரிடம் கூறியிருந்தார். பின்னர் அவர் இவரையும் சிங்கப்பூர் சார்ந்த நாடக நடிகர் புரவலனையும் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அழைத்துச் சென்று, திரைக்கதையை அவருக்கு முன்னால் விவரித்தார். ரஜினிகாந்தின் ஆலோசனையின் பேரில், மானு இறுதியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், [5] இருப்பினும், " ஏழு வயதுடைய நான்கு பிள்ளைகளுக்கு தாயாக" நடிக்க வேண்டுமா என்பது இவரது ஒரே கவலையாக இருந்தது. இருந்தாலும் இது மானுவுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இப்படம் குறைந்த அளவே பிரபலமானது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் மோசமான அளவே இடம்பெற்றது. [6]

திரைப்பட வரலாறு தொகு

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புக்கள்
1998 காதல் மன்னன் திலோத்தமா தமிழ்
2014 என்ன சத்தம் இந்த நேரம் நால்வரின் தாய் தமிழ்

குறிப்புகள் தொகு

  1. "- Bollywood Movie News - IndiaGlitz.com". IndiaGlitz.com இம் மூலத்தில் இருந்து 2015-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150815002229/http://www.indiaglitz.com/maanu%20clarifies-hindi-news-73468. பார்த்த நாள்: 2018-09-20. 
  2. "The Hindu : Ebullient presentation". www.thehindu.com. Archived from the original on 2004-11-21. பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
  3. "Dancing all the way: Krishnakshi Sharma | Assam Portal". www.assam.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
  4. "Ayngaran International". www.ayngaran.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-20.
  5. "I've grown to call Rajinikanth appa". Deccan Chronicle. 25 November 2013. Archived from the original on 26 November 2013. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
  6. Malathi Rangarajan (14 December 2013). "Act II". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானு&oldid=3680557" இலிருந்து மீள்விக்கப்பட்டது