மான் தேசி மகளிர் கூட்டுறவு வங்கி

மான் பூர்வகுடி மகளிர் கூட்டுறவு வங்கி (Mann Deshi Mahila Sahakari Bank), இந்தியாவின் முதல் மகளிர் கூட்டுறவு வங்கி ஆகும். 1997ம் ஆண்டில் கிராமிய மகளிர் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட இவ்வங்கி மகளிரால் மட்டுமே பங்கு மூலதனம் போட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதன் நிறுவனத் தலைவி சேத்னா கலா ஆவார். இக்கூட்டுறவு வங்கியில் தற்போது 1335 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மகளிர் கூட்டுறவு வங்கியின் தலைமையிடம், மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் மான் தாலுகாவில் உள்ள மகஸ்வத் நகரத்தில் அமைந்துள்ளது. மகாராட்டிரா மாநிலத்தில் இவ்வங்கியின் எட்டு கிளைகள் உள்ளது.

மான் தேசி மகளிர் கூட்டுறவு வங்கி
வகைமகளிர் கூட்டுறவு கடனுதவி வங்கி
நிறுவுகை1997
தலைமையகம்மகஸ்வத், சதாரா மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
முதன்மை நபர்கள்திருமதி. சேத்னா கலா, (தலைவர்)
திருமதி. ரேகா குல்கர்ணி (தலைமை நிர்வாக இயக்குநர்)
திருமதி. விஜயா நானாசோ கோலாப்பே, பொது மேலாளர்
தொழில்துறைவங்கிப்பணிகள்
உற்பத்திகள்சேமிப்பு மற்றும் கடனுதவித் திட்டங்கள்
இணையத்தளம்https://manndeshibank.com/

இந்த வங்கியில் பெண்கள் மற்றும் ஆண்கள் கணக்கு தொடங்கலாம். ஆனால் பெண்கள் மட்டுமே கடன் பெறத் தகுதியுடையவர்கள். மான் தேசி மகளிர் வங்கி, ஒரு இலட்சம் பெண்களுக்கு கடந்த 25 ஆண்டுகளில் கடன் வழங்கியுள்ளது. வங்கியில் மொத்தம் ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் கணக்கு வைத்துள்ளார்கள். அதில் 25% பேர் மட்டுமே ஆண்கள், மீதி 75% பேர் பெண்கள்.[1]

வரலாறு தொகு

படிப்பறிவு இல்லாத சேதனா சின்கா மற்றும் காந்தாபாயும் மகஸ்வத் ஊரில் உள்ள வங்கியில் அன்றாடம் ரூபாய் 5 அல்லது 10 சேமிக்க கணக்கு திறப்பதற்கு வங்கிக்குச் சென்ற போது, வங்கி மேலாளர் கணக்கு திறக்க மறுத்தார். எனவே சேத்னா சின்காவுக்கு மகஸ்வத்தில் கூட்டுறவு வங்கியை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழும்பியது. வங்கி தொடங்க உரிமம் கோரி, சேத்னா சின்கா, 15 பெண்களுடன் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியை அணுகி அனுமதி பெற்று, 1997ம் ஆண்டில் மகளிர் கூட்டுறவு வங்கியை நிறுவினார்.

வங்கி நடவடிக்கைகள் தொகு

இவ்வங்கியானது ஆண்களிடமிருந்து சேமிப்புத் தொகை பெற்றாலும்; கடன்கள் மட்டும் மகளிருக்கு மட்டுமே வழங்குகிறது. இவ்வங்கி சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, நிலைத்த வைப்பு கணக்கு பெறுவதுடன், 4 முதல் 5 வரையிலான மகளிர் குழுக்களுக்கு கூட்டுப் பொறுப்பு அடிப்படையில் கடன் வழங்குகிறது. சுய தொழில் அடிப்படையில் சந்தையில்/தெருக்களில் பொருட்களை விற்பனை மகளிருக்கு வாரத்திற்கு ரூபாய் 30,000 வரை கடன் வழங்குகிறது. பருவகாலங்களில் மட்டும் வியாபாரம் செய்யும் குறுந்தொழில் மகளிருக்கு ரூபாய் 40,000 முதல் 5 இலட்சம் வரை ஈட்டுக் கடன் வழங்குகிறது. மேலும் மகளிருக்கு காசுக்கடன், நீண்ட காலக் கடன், மத்தியக்காலக் கடன், பொதுக்கடன், நகைக்கடன், வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் மற்றும் நிதி மீதான கடன்கள் வழங்குகிறது. பெண்களின் நேரத்தை மிச்சப் படுத்துவதற்கு, கடன்களை வசூலிக்கும் முகவர்கள் நேரில் சென்று மகளிடருமிருந்து கடன்களை வசூலிக்கின்றனர். ஆண்டின் முடிவில் கிடைக்கும் இலாபத்திலிருந்து மகளிருக்கு ஈவுத்தொகை வழங்கப்படுகிறது.

நிர்வாகக் குழு தொகு

  • தலைவர் - திருமதி. சேத்னா கலா
  • தலைமை நிர்வாக இயக்குநர் - திருமதி. ரேகா குல்கர்ணி
  • பொது மேலாளர் - திருமதி. விஜயா நானாசோ கோலாப்பே
  • தலைமை நிதி அலுவலர் - திருமதி. சுஷ்மா சந்திரகாந்த் சிண்டே
  • பங்குகள் துறை தலைவி - திருமதி. வைஷாலி மாருதி சிண்டே
  • மேலாளர், தகவல் தொழில்நுட்பத்துறை - தனஞ்செயன் எஸ். போக்கரே
  • மேலாளர், மனித ஆற்றல் - அங்கேஸ்வர் பாபன் தயாகுடே (ஆண்)
  • கடன் & வசூல் தலைமை அலுவலர் - இரவீந்திர மதுகர் வீர்கர் (ஆண்)

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு