மகஸ்வத்
மகஸ்வத் (Mhaswad or Mhasvad), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள மான் அல்லது தகில்வாடி வருவாய் வட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும்.[1] இது சதாரா நகரத்திற்கு கிழக்கே 86.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மகஸ்வத் | |
---|---|
நகர | |
ஆள்கூறுகள்: 17°38′06″N 74°47′13″E / 17.635°N 74.787°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சதாரா |
வருவாய் வட்டம் | மான் தாலுகா |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 24,120 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 415509/415510 |
தொலைபேசி குறியீடு | 2373 |
வாகனப் பதிவு | MH-11 |
பாலின விகிதம் | 1.02 ♂/♀ |
எழுத்தறிவு | 61.37% |
சதாராவிலிருந்து தொலைவு | 86.4 கிலோ மீட்டர் |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும்; 4842 வீடுகளும் கொண்ட மகஸ்வத் நகராட்சியின் மக்கள் தொகை 24,120 ஆகும். அதில் ஆண்கள் 12185 மற்றும் பெண்கள் 11935 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.47% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 64.87% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 0.32% மற்றும் 13.78% ஆகவுள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 91.49%, இசுலாமியர் 4.18%, பௌத்தர்கள் 2.19%, சமணர்கள் 1.87% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[2]
முதல் மகளிர் கூட்டுறவு வங்கி
தொகுமகஸ்வத் நகரத்தில் இந்தியாவின் முதல் கிராமிய மகளிர் கூட்டுறவு வங்கி[3] 1997ம் ஆண்டில் துவக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Satara Zilla Parishad". zpsatara.gov.in. Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
- ↑ Mhaswad City Population - Satara, Maharashtra
- ↑ maan Deshi Mahila Bank
- ↑ Shingnapur Chowk, At post Mhaswad, Taluka Mann, District Satara, 415509