மாபுராணம் என்பது ஒரு பழந்தமிழ் இலக்கண நூல் ஆகும். இது இரண்டாம் தமிழ் சங்க காலத்தியதாகக் கருதப்படுகிறது.[1][2] இது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பெருந் தொன்னூல் என்ற தமிழ்ப் பெயருக்கு மாபுராணம் என்பது வடமொழிப் பெயராகும்.[3] புராணம் என்று பெயரிட்டு செய்யுள் இலக்கணம் முதலாவதாக பல்வகை இலக்கணமும் கூறுதல் வடநூலாருக்கு உடன்பாடு. இதனை வடநூல் அக்னி புராணத்தால் அறியலாம். இம்மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை சூத்திரமுமாக இருந்தது.[3]

அகத்தியர் இயல், இசை, நாடகம் முதலிய எல்லாவற்றிற்கும் பரந்து விரிந்த இலக்கணம் அமைத்தார் என்றும் மாபுராணம் ஆசிரியர் அவற்றுள் ஒவ்வொரு பகுதியை எடுத்து தொகை, வகை வாரியாகக் கூறினார் என்றும் கொள்ளலாம்.[3]

மாபுராணத்தை எழுதியவர் குறுமுனிவரின் மாணாக்கர் பன்னிருவரில் சிகண்டி என்னும் முனிவர் ஆவார். அநாகுலன் என்ற பாண்டியனுக்கும் திலோத்தமை என்ற பெண்ணுக்கும் பிறந்த சாரகுமாரன் பாண்டியன் இசையறிதல் பொருட்டு இந்நூல் இயற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. சீனிவாச ஐயங்கார், பி. டி. (1929). History of the Tamils: from the earliest times to 600 A.D.. New Delhi: Asian Educational Service. பக். 231–232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0145-9. 
  2. சுவெலபில், கமில் (1973). The Smile of Murugan: On Tamil Literature of South India. Leiden: Brill. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-03591-5. 
  3. 3.0 3.1 3.2 3.3 இராகவையங்கார், இரா. (1941). தமிழ் வரலாறு. மதுரை: ஈ. எஸ். வரதராஜையர். பக். 221–225. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபுராணம்&oldid=3721066" இலிருந்து மீள்விக்கப்பட்டது