மாம்பழ ஆரஞ்சு
மாம்பழ ஆரஞ்சு (Mango Orange) என்பது அதிகாரப்பூர்வமாக 'மாங்கோரேஞ்ச்' என்று உச்சரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம் தேயிலைத் தோட்டங்களால் சூழ்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான கிராம மக்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இப்பகுதியில் ஓரிரு பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.
இடம்
தொகுமாம்பழ ஆரஞ்சு கிராமம் கேரளாவில் உள்ள சுல்தான் பத்தேரியிலிருந்து 30 கி. மீ. தொலைவிலும் தமிழ்நாடு கூடலூரிலிருந்து 25 கி. மீ. தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டில், இலண்டனை தளமாகக் கொண்ட ஒரு சுரங்க நிறுவனம் இந்த கிராமத்தில் ஓர் நகரத்தை உருவாக்கியது. இதன் ஒருபகுதியாகக் கிறித்துவ தேவாலயம் மற்றும் பந்தய மைதானமும் கட்டப்பட்டது. சுரங்கத்திற்கான வாய்ப்பு இல்லாமல் போனபோது, பிரித்தானிய முதலீட்டாளர்கள் தோட்டத் தொழிலுக்கு மாறினார்கள். காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டன. பல ஐரோப்பியர்கள் இங்குக் குடியேறி இப்பணியை மேற்பார்வையிட்டனர். மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இந்தியர்கள் தோட்டங்களில் பணிபுரிந்தனர்.
மக்கள்தொகை
தொகுதற்போது, முழு கிராமமும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (டாண்டீ), ஆர்பிஜி குழுமத்தின் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனம் மற்றும் முருகப்பா குழுமத்தின் பாரி விவசாய தொழிற்சாலை நிறுவனத்தின் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ளது. இக்கிராமம் பனிய, குறும்ப, காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியின மக்களின் புனிதமான இடமாகும். இன்று இக்கிராமத்தின் மக்கள் தொகை புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், கவுடாக்கள் மற்றும் கேரள முசுலிம்களால் நிறைந்து காணப்படுகிறது. பழங்குடியின மக்களால் நடத்தப்படும் சிறிய அளவிலான தங்கச் சுரங்க நடவடிக்கைகளும் இங்குப் பிரபலமானது.
யானை தாக்குதல்கள்
தொகு2016ஆம் ஆண்டில், யானைத் தாக்குதல்களால் தொடர்ச்சியான மரணங்கள் காரணமாக மாம்பழ ஆரஞ்சு கிராமம் தேசிய அளவில் கவனத்தினை ஈர்த்தது.[1]
மரபணு தொகுப்பு தோட்டம்
தொகு2424 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நாடுகானி சந்திப்பில் உள்ள வெப்பமண்டல மரபணுக் குளம், 47,000 வகையான தாவரங்களைக் கொண்டுள்ளது. மேலும் இங்குப் பட்டாம்பூச்சிகளின் அருங்காட்சியகமும் உள்ளது. தங்குமிடம், மற்றும் மலையேற்ற வசதிகளும் இங்கு உள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Man killed in elephant attack inside forest". Thehindu.com. 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 17 November 2021.