மாரி பிளாக்

அரசியல் வாதி

மாரி பிளாக் (Mhairi Black, பிறப்பு: 12 செப்டம்பர் 1994) என்பவர் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றப் பெண் உறுப்பினர் ஆவார். 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தலில் இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் சார்பாக பைசலி, தெற்கு ரேன்பரீசயர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மிகவும் சிறிய வயதில் இருப்பதால் "நாடாளுமன்றச் செல்லக்குட்டி" என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.[1][2]

மாரி பிளாக்
மாரி பிளாக்
ஐக்கிய இராச்சியம் நாடாளுமன்றம்
பைசலி, தெற்கு ரேன்பரீசயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2015
முன்னையவர்டக்ளசு அலெக்சாண்டர்
பெரும்பான்மை5684 (12.3%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 12, 1994 (1994-09-12) (அகவை 30)
பைசலி, இசுக்கொட்லாந்து
குடியுரிமைஐக்கிய இராச்சியம்
தேசியம்இசுக்கொட்லாந்து
அரசியல் கட்சிஇசுக்கொட்டிய தேசியக் கட்சி
முன்னாள் கல்லூரிகிளாசுகோ பல்கலைக்கழகம்
வேலைமாணவி
இணையத்தளம்www.mhairiblack.scot/

1832ஆம் ஆண்டிற்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் வயதில் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார், 1880இல் 21 வயதுடைய சேம்சு டிக்கின்சன் என்பவரே 1832 க்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையவராக இருந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

தொகு

2015 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தலில் பைசலி, தெற்கு ரேன்பரீசயர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மாரி பிளாக், கிளாசுஃகோ பல்கலைக்கழகத்தில் "அரசியல் மற்றும் பொதுக்கொள்கை" பட்டப்படிப்பில் தன் கடைசி ஆண்டைப் படித்து வருகிறார்.

தேர்தல் பிரகடனம்

தொகு
  • பைசலி, தெற்கு ரேன்பரீசயர் மக்களின் வாழ்க்கையில் ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே நான் தேர்தலில் நிற்கிறேன்.
  • தற்போதைய அரசின் நிதிக்குறைப்புக் கொள்கைகளுக்கும், கடுமையான நல்வாழ்வு நிதிக்குறைப்பிற்கும் எதிராக பிரச்சாரம் செய்வேன். அரசின் இச்செயல்கள் எண்ணற்ற மனிதர்களையும், குடும்பங்களையும், சமூக மக்களையும் விரக்தியில் தள்ளுகிறது, மற்றும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் பிழைப்பிற்காக உணவு வங்கிகளை நம்பும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் எத்தனையோ குழந்தைகள் ஏழ்மையில் தவிக்க, ஒரு இலட்சம் கோடி பணத்தை அணு ஆயுதங்களுக்காக செலவிடுவது மிகவும் கொடுமையானது.
  • சமூகத்தில் தேவையுள்ளோருக்கு ஒரு உண்மையான மாற்றம் தேவை. இசுக்கொட்லாந்தின் பொருளாதாரத்தை உயர்த்த உண்மையான அதிகாரமும், அரசியல் நோக்கின்றி இத்தொகுதிக்காக உண்மைக் குரல் கொடுக்கவும் வேண்டியது தற்போது அவசியம்.
  • நீங்கள் உங்கள் நம்பிக்கையை என் மீது வைத்தால், நான் உங்களைக் கைவிடமாட்டேன்.[4]

- மாரி பிளாக்

தனிவாழ்க்கை

தொகு

பைசலி ஊரிலே வசிக்கும் மாரி கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். தன் பள்ளிக்கூட மகளிர் கால்பந்தாட்ட அணியில் இணைந்து ஆடியவர். பாட்ரிக் திஃச்டில் என்ற கால்பந்தாட்ட அணியின் விளையாட்டுக்களைக் காண்பதற்கான பருவ நுழைவுச்சீட்டை வைத்துள்ளார். இசைக்கருவிகள் மீட்டுவதிலும் இசையிலும் இவருக்கு ஆர்வம் இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "20 வயதில் எம் பி [MP at 20 years]" (in தமிழ்). பிபிசி (இலண்டன்: பிபிசி தமிழ்). 2015-05-08. http://www.bbc.co.uk/tamil/global/2015/05/150508_youngestmp. பார்த்த நாள்: 2015-05-08. "வெறும் 20 வயதேயான பல்கலைக் கழக மாணவி மாரி பிளாக், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு 1667 ஆம் ஆண்டுக்குப் பின் தேர்வான மிகவும் இளையவர் இவர்தான்" 
  2. "Paisley & Renfrewshire South - Election 2015". பிபிசி (இலண்டன்: பிபிசி). 2015-05-08. http://www.bbc.co.uk/news/politics/constituencies/S14000053. பார்த்த நாள்: 2015-05-08. "௲௰௫ ஐக்கிய இராச்சியத் தேர்தலில் மாரி பிளாக்கின் பைசலி & தெற்கு ரேன்பரீசயர் தொகுதி" 
  3. "Election 2015 results: the weird, wonderful and the downright unexpected". டெலகிராப். பார்க்கப்பட்ட நாள் 21 மே 2015.
  4. "About - Mhairi Black". About. Archived from the original on 2015-05-02. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.
  5. "Mhairi Black - Candidate for Paisley & Renfrewshire South". People. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாரி பிளாக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி_பிளாக்&oldid=3925547" இலிருந்து மீள்விக்கப்பட்டது