மாருதி 800 (Maruti 800) என்பது மாருதி சுசூக்கி நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறியரக காராகும். துவக்கத்தில் இதன் விலை 53000 ஆகும். இந்த மாதிரி வண்டிகள் 1983 முதல் 2014 சனவரி 18 வரை தயாரிக்கப்பட்டன.[3] முதல் தலைமுறை (SS80) 1979 சுசூகி ஃப்ரான்ட்டியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 800 cc F8B எஞ்சினைக் கொண்டு இருந்தது. இது இந்தியாவில் மிகவும் செல்வாக்கு செலுத்திய வாகனமாக பரவலாக இருந்தது. தயாரிக்கப்பட்ட 2.87 மில்லியன் 800 மகிழுந்துகளில், 2.66 மில்லியன் மகிழுந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன.[4]

மாருதி 800
உற்பத்தியாளர்மாருதி சுசூக்கி
வேறு பெயர்சுசூகி மெஹ்ரான் (PAK)
சுசூகி மாருதி (EUR)
சுசூகி நன்டிக் (MT)
உற்பத்தி1983–18 சனவரி 2011
2.7 மில்லியன் மகிழுந்துகள் உருவாக்கி விற்பனைக்கு விடப்பட்டன
பொருத்துதல்இந்தியா, அரியானா, குர்கான்
மாருதி ஆல்டோ 800
வகுப்புசிறியரக மகிழுந்து
உடல் வடிவம்ஐந்து கதவுகள்
திட்ட அமைப்புமுன்பக்க எஞ்சின், முன்-சக்கர-இயக்கி
இயந்திரம்796 cc (0.8 L) F8B MPFI I3 (India)[1]
796 cc (0.8 L) F8B carb. I3 (Pakistan)[2]
செலுத்தும் சாதனம்4-speed manual
5-speed manual
சில்லு அடிப்பாகம்2,175 mm (85.6 அங்)
நீளம்3,335 mm (131.3 அங்)
அகலம்1,440 mm (56.7 அங்)
RelatedSuzuki Fronte

30 ஆண்டுகளுக்கு மேலாக மாருதி 800 இந்தியாவில் ஆரம்பகாலத்தில் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட மகிழுந்தான இந்துஸ்தான் அம்பாசிடருக்கு அடுத்த படியாக தயாரிக்கபட்ட மகிழுந்தாகும். இவை இந்தியாவில் தாராளமயமாக்கலுக்கு முன்பாகவே ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்துடன் இந்திய ஒன்றிய அரசு கூட்டு சேர்ந்து உருவாக்கிய மாருதி நிறுவனத்தால் இந்த மகிழுந்து உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுடன் இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நடுத்தர மக்களும் மகிழுந்தை வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது இது.வின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 1984 முதல் 2002 வரை தயாரிக்கப்பட்ட ஒரு மகிழுந்து ஆகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Maruti 800 :: Maruti 800". பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
  2. "PakWheels.com :: Suzuki Mehran 2005". Archived from the original on 2006-03-22. பார்க்கப்பட்ட நாள் 2009-04-24.
  3. "Maruti Suzuki stops production of iconic 800". livemint.com. 2014-02-07. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
  4. "End of the road for India's beloved Maruti 800". HT. 2014-02-08. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  5. "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதி_800&oldid=3893245" இலிருந்து மீள்விக்கப்பட்டது