மாருதி சுசூக்கி
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் (Maruti Suzuki India Limited) (தேபச: MARUTI , முபச: 532500 ) இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.
வகை | பொது (BSE MARUTI, NSE MARUTI) |
---|---|
நிறுவுகை | 1981[1] |
தலைமையகம் | குர்காவுன், அரியானா, இந்தியா |
முதன்மை நபர்கள் | ஷின்சோ நாக்கனிஷி, தலைமை செயற்குழு அதிகாரி ஜகதீஷ் கத்தர், தலைமை நிருவாகி |
தொழில்துறை | தானுந்து |
உற்பத்திகள் | தானுந்துகள் |
வருமானம் | ▲$2.5 பில்லியன் (2005) |
பணியாளர் | 6,903[2] |
தாய் நிறுவனம் | சுசூக்கி |
இணையத்தளம் | www.marutisuzuki.com |
2020, ஏப்ரல் முதல் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களின் உற்பத்தியை மாருதி சுசூக்கி கைவிட முடிவெடுத்துள்ளது.பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 23 சதவீதம் பங்களிப்பை டீசல் என்ஜின் கொண்ட கார்கள் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் மின் தானுந்து, பெட்ரோல் என்ஜின் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. [3]
மாருதி சுசூக்கி எலக்ட்ரிக்
தொகுஇந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் காரை Evx என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகுஇந்தியாவில் மாருதி சுசுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்துள்ளது.