மார்க்சிய பெண்ணியம்

(மார்க்சியப் பெண்ணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்க்சியப் பெண்ணியம் (Marxist feminism) என்பது பெண்ணியத்தின் ஒருவக மெய்யியல் வேறுபாட்டுப் புலமாகும். இது பெண்ணியத்தில் மார்க்சியக் கோட்பாட்டை இணைத்து விரிவாக்குகிறது. மார்க்சியப் பெண்ணியம் முதலாளியத்தாலும் தனிச்சொத்துடைமையாலும் மகளிர் சுரண்டப்படுவதைப் பகுப்பாய்வு செய்கிறது.[1]முதலாளியத்தில் மகளிரின் உழைப்பின் பெரும்பகுதி ஈடுகாட்ட்டப்படுவதில்லை; எனவே, மார்க்சியப் பெண்ணியத்தின்படி, மகளிரின் விடுதலை, முதலாளிய அமைப்புகளை அழித்தொழிக்காமல் பெறவியலாது.[2] மார்க்சியப் பெண்ணியர்கள் மார்க்சியக் கோட்பாட்டை வீட்டு உழைப்புக்கும் பாலியல் உறவுகளுக்கும் பயன்படுத்தி விரிவாக்குகின்றனர்.

மார்க்சியப் பெண்ணியம் வரலாற்றுப் பொருள்முதலிய அடிப்படையைக் கொண்டது; எனவே, இது நிகரறப் பெண்னியத்தையும், பேரளவில், பொருள்முதலியப் பெண்ணியத்தையும் ஒத்ததாக உள்ளது. பிந்தைய இருவகைகளும் மார்க்சியக் கோட்பாட்டைச் சற்றே குறைந்தநிலை வரம்புகளின் அடிப்படையில் பயன்படுத்துகின்றன;[3]ஆனால், மார்த்தா ஈ. கிமெனெசு[3] மார்க்சியப் பெண்ணியம், பொருள்முதலியப் பெண்ணிய வகைகளின் வேறுபாடுகளை ஆய்வு செய்யும்போது, "இவற்றின் கோட்பாட்டுநிலை பாகுபாட்டைத் தெளிவாக வரையறுத்து நிறுவுதல் மிகவும் அரிதாகவுள்ளது" எனக் குறிப்பிடுகிறார்.

மார்க்சியக் கோட்பாட்டுப் பின்னணி தொகு

மாந்தச் சமூகப் படிமலர்ச்சிப் போக்கில், உருவாகிய பொருளாக்கக் கட்டமைப்புகள வருக்க வேறுப்பாட்டையும் ஒரு பாலார் மற்றவரை ஒடுக்குமுறைக்கு உல்ளாக்க நெர்ந்தமையையும் பேசுகிறது. இந்த ஒடுக்குமுறைச் சமூகப் படிமலர்ச்சி, குடும்பக் கட்டமைப்புப் படிமலர்ச்சியிலும் வெளிப்பட்டது; அதாவது, பொதுவாக, இந்த ஒடுக்குமுறை வருக்கச் சமுதாயத்தோடே பெண்பாலின ஒடுக்குமுறையும் தோன்றியது.

குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் (1884) நூலில், பிரெடெரிக் ஏங்கல்சு தொடக்கநிலைக் குடும்பத்தஓடு தனிச்சொத்தும் அரசும் தோன்றியதைத் தொல்குடிச் சமூக ஆய்வில் இருந்து தற்கால மானிடவியல் ஆய்வூடாக விளக்குகிறார். அவர் முதலில் பெண்கள் பெற்ரிருந்த சமூக உயர்வையும் அவர்களது உழைப்பு ஆண்களின் உழைப்புக்குச் சமமாக மதிக்கப்பட்டதையும் விளக்குகிறார்; அந்நிலையில், அதாவது தொடக்கநிலைத் தாய்வழிச் சமூக அமைப்பில் குடும்ப தலைப்புப் பெயர் பெண்கள்வழி அமைந்ததையும் ஆண்கள்வழி அமைய வாய்ப்பில்லாத நிலையைப் பற்றியும் விளக்குகிறார்.[4]

வேளாண்மைச் சமூகத்தில் செல்வ வளம் பெருகியதும் அந்த வள உருவாக்கம் வீட்டுக்கு வெளியே ஆடவரின் உழைப்பால் ஏற்பட்டதால் ஆண்கள்வழி மரபுரிமைப் பேணும் தந்தைவழி சமூகம் உருவானதுமிதற்காகவே ஒருதார மணமுறை வற்புறுத்தப்பட்டு, பெண்கள் வீட்டுப்பணிக்கு ஒதுக்கப்பட்டனர். ஆண்கள் தம் அதிகாரத்தை வீட்டிலும் நாட்டிலும் செலுத்தலாயினர்;மனைவியரைக் கற்பெனும் பெயரால் இற்செறித்துவிட்டு தாம் மட்டும் பரத்தமையிலும் ஈடுபட்டனர்.[4]

மார்க்சும் ஏங்கல்சும் 1846 முதலே, "முதல் வேலைப் பிரிவினை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் தான் ஏற்பட்டதெனவும் இது இனப்பெருக்கம்வழி ஒருதார மணமுறையில் ஆனுக்கும் பெண்னுக்கும் இடையில் விளைந்த முதல் முரண்பாடாகும் எனவும் முதல் வருக்க ஒடுக்குமுறையே பெண்பாலினத்தை ஆண்கள் அடக்கியதில் தான் தோன்றியதெனவும் கருதியதை ஏங்கல்சு தன் நூலின் வழியாக எழுதுகிறார்". [4]

பாலின ஒடுக்குமுறை பண்பாட்டியலாகத் தோன்றி நிறுவனமயப் படுத்தப்பட்ட சமனின்மைவழி தொடரலானது . பெண்களுக்கு எதிராக ஆண்கள் எடுத்துகொண்ட சலுகைகள் பெண்களின் வீட்டுப்பணிகளுக்கு, அதற்காக பெண்கள் செலவிடும் உழைப்புக்குச் சம மதிப்பளிக்க மறுத்தன; ஒடுக்குமுறைச் சமூகக் கட்டமைப்பில் தன்மயமான தொழிலாளரும் தம் வீட்டுப் பெண்களை விளிம்புநிலைக்குத் தள்ள நேர்ந்தது.[2]

குறிப்பிடத்தகுந்த மார்க்சியப் பெண்ணியர்கள் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Desai, Murli (2014). "Feminism and policy approaches for gender aware development". in Desai, Murli. The paradigm of international social development: ideologies, development systems and policy approaches. New York: Routledge. பக். 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135010256. https://books.google.com/books?id=hUPhAQAAQBAJ&pg=PA119. 
    சான்று:
  2. 2.0 2.1 "Feminist perspectives on class and work". Stanford Encyclopedia of Philosophy. (2010). Ed. Stanford University. 
  3. 3.0 3.1 "Marxist/Materialist Feminism". www.cddc.vt.edu. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
  4. 4.0 4.1 4.2 Friedrich Engels (1972) (in en). The Origin of the Family, Private Property, and the State, in the Light of the Researches of Lewis H. Morgan. International Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7178-0359-0. https://www.marxists.org/archive/marx/works/download/pdf/origin_family.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்சிய_பெண்ணியம்&oldid=3777739" இலிருந்து மீள்விக்கப்பட்டது