மார்க்ஸ் பிரதர்ஸ்
தெ மார்க்ஸ் பிரதர்ஸ் (Marx Brothers) என்பது ஓர் அமெரிக்கக் குடும்ப நகைச்சுவை நாடகம் ஆகும். இது 1905 ஆம் ஆண்டு முதல் 1949 வரை பிராடுவே அரங்கு மற்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த நகைச்சுவை நாடகம் மொத்தம் 13 நிகழ்ச்சிகளைக் கொண்டது. அதில் ஐந்து, அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 100 சிறந்த நகைச்சுவைத் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் 1933 ஆம் ஆண்டில் வெளியான டக் சூப் மற்றும் 1935 ஆம் ஆண்டில் வெளியான தி ஓபரா அகியன முதல் 15 இடத்திற்குள் உள்ளது. அவை 20 ஆம் நூற்றாண்டில் உள்ள விமர்சகர்கள், அறிஞர்கள், மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிற நகைச்சுவைத் திரைப்படமாக உள்ளது. இவர்கள் ஏஎஃப் ஐ யின் 100 ஆண்டுகள் 100 திரை நட்சத்திரங்கள் எனும் பட்டியலிலும் கிளாசிக்கல் ஹாலிவுட்டின் சிறந்த 25 ஆண்கள் பட்டியலிலும் இடம் பெற்றனர்.
தெ மார்க்ஸ் பிரதர்ஸ் | |
---|---|
[[Image:|200px|ஐந்தில் நால்வர்1931 இல் (மேலிருந்து கீழாக சிகோ, அர்போ, குரூச்சோ, செபோ)]] ஐந்தில் நால்வர்1931 இல் (மேலிருந்து கீழாக சிகோ, அர்போ, குரூச்சோ, செபோ) | |
Medium | திரைப்படம், பிராடுவே அரங்கு |
தேசியம் | அமெரிக்கன் |
நடிப்புக் காலம் | 1905–1949 |
முன்னாள் உறுப்பினர்கள் |
|
இந்தக் குழுவில் உள்ளவர்கள் இன்றளவும் அவர்களின் திரைப் பெயர்களான சிக்கோ, அர்போ, குரூச்சொ, கும்மோ மற்றும் செப்பொ ஆகியவற்றால் அறியப்படுகின்றனர். இவர்களில் ஆறு சகோதரர்கள் உள்ளனர். முதலாமவர் மன்ஃபிரட் என்பவர் இவர் தனது ஏழாம் மாதத்திலேயே இறந்தார். இவரின் நினைவாக செப்போ என்பவர் இவரது பெயரை தனது நடுப் பெயராக வைத்திருந்தார்.
சிக்கோ, அர்போ மற்றும் குரூச்சோ ஆகிய மூன்று மூத்த சகோதரர்கள் முக்கிய நடிகர்களாக இருந்தனர். 1950 ஆம் ஆண்டில் இந்தக் குழு கலைக்கப்பட்ட பிறகு இவர்களில் குரூச்சோ என்பவர் தொலைக்காட்சிகளில் நடிக்கத் தொடங்கி பரவலாக புகழ் பெற்றார். ஆனால் அர்போ மற்றும் சிக்கோ ஆகியோர் இவரின் அளவிற்குப் புகழ் பெறவில்லை. இளையவர்களான கும்மோ மற்றும் செப்போ ஆகிய இருவரும் தங்களது மூத்த சகோதரர்களைப் போன்று தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால் இவர்கள் தொழில் துவங்கினர். அதில் வெற்றிகரமாக செயல்பட்டனர். கும்மோ எந்தத் திரைப்படங்களிலும் தோன்றவில்லை. செப்போ தனது முதல் ஐந்துத் திரைப்படங்களில் நகைச்சுவை அல்லாத கதாப்பத்திரத்தில் நடித்தார்.
சகோதரர்களின் பெயர்கள், குடும்ப பின்னணி
தொகுமார்க்ஸ் சகோதரர்கள் நியூயார்க் நகரத்தில் பிறந்தனர். இவரின் பெற்றோர்கள் ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்து குடியேறிய யூதர்கள் ஆவர். இவர்களின் தாய் மியனா "மின்னி" சுகோன்பெர்க் ,மின்னெ பால்மர் எனப் பரவலாக அறியப்படும் இவர் பின்னாளில் இந்தச் சகோதரர்களுக்கு மேலாளராக இருந்தார். இவர் கிழக்கு பிரிசாவின் தோர்ன்மினைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சாமுவேல் அலாஸ்காவில் உள்ள மெர்ட்ஸ்வில்லர் எனும் சிறிய கிராமத்தினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தையல்காரராகப் பணிபுரிந்தார்.[1][2]
சிகோ மார்க்ஸ்
தொகுலியோனார்டு ஜோசப் எனும் இயற்பெயர் கொண்ட இவர் மார்ச் 22, 1887 ஆம் ஆண்டில் பிறந்தார். தமனிக்கூழ்மைத் தடிப்பினால் இவர் இறந்தார்.
அர்போ
தொகுஅடோல்ப் ஆர்தர் எனும் இயற்பெயர் கொண்ட இவர் நவம்பர் 23, 1888 ஆம் ஆண்டில் பிறந்தார். இதய செயலிழப்பினால் இவர் இறந்தார்.
குரூச்சோ
தொகுஜூலியஸ் ஹென்றி எனும் இயற்பெயர் கொண்ட இவர் அக்டோபர் 2, 1980 ஆம் ஆண்டில் பிறந்தார். நுரையீரல் அழற்சியினால் இவர் இறந்தார்.
கும்மோ
தொகுமிடன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் அக்டோபர் 23, 1892 ஆம் ஆண்டில் பிறந்தார். பெருமூளை இரத்த ஒழுக்கினால் இவர் இறந்தார்.
செப்போ
தொகுஹெர்பர்ட் மேன்ஃபிரட் எனும் இயற்பெயர் கொண்ட இவர் பெப்ரவரி 25, 1901 ஆம் ஆண்டில் பிறந்தார். நுரையீரல் புற்றுநோயினால் இவர் இறந்தார்.
மேடை பெயர் | பிறப்பு பெயர் | பிறந்த | இறந்தார் | வயது | மரணம் |
---|---|---|---|---|---|
சிகோ | லியோனார்டு ஜோசப் | மார்ச்சு 22, 1887 | அக்டோபர் 11, 1961 | 74 | ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் |
அர்போ | அடோல்ப் (பிறகு 1911: ஆர்தர்) | நவம்பர் 23, 1888 | செப்டம்பர் 28, 1964 | 75 | இதய செயலிழப்பு |
குரூச்சோ | ஜூலியஸ் ஹென்றி | அக்டோபர் 2, 1890 | ஆகத்து 19, 1977 | 86 | நிமோனியா |
கும்மோ | மில்டன் | அக்டோபர் 23, 1892[3] | ஏப்ரல் 21, 1977 | 83 | பெருமூளை இரத்த ஒழுக்கு |
செப்போ | ஹெர்பர்ட் மேன்ஃபிரட் | பெப்ரவரி 25, 1901 | நவம்பர் 30, 1979 | 78 | நுரையீரல் புற்றுநோய் |
சான்றுகள்
தொகு- ↑ "La famille paternelle des Marx Brothers". Judaisme.sdv.fr. பார்க்கப்பட்ட நாள் September 21, 2018.
- ↑ "Mrs. Minnie Marx. Mother of Four Marx Brothers, Musical Comedy Stars, Dies.". த நியூயார்க் டைம்ஸ்: p. 27. September 16, 1929. http://timesmachine.nytimes.com/timesmachine/1929/09/16/95997162.html#95997162.html?pageNumber=21&_suid=147094807936009446111808468656.
- ↑ 1900 Census shows birth year as Oct 1892 and his WWI draft registration says 21 Oct 1892 Roll #1613143, on his death certificate and his grave the year 1893 is given.