மார்ட்டின் கூப்பர்

அமெரிக்கப் பொறியியலாளர்

மார்ட்டின் கூப்பர் (Martin Cooper, பிறப்பு: டிசம்பர் 26, 1928) ஒரு அமெரிக்கப் பொறியியலாளர் ஆவார். இவர் கம்பியற்ற தகவல்தொடர்புத் துறையில் ஒரு முன்னோடியாகவும் தொலைநோக்குத் தன்மையுடனும் இருக்கிறார். இத்துறையில் பதினொரு காப்புரிமைகள் இருப்பதால், அவர் ரேடியோ ஸ்பெக்ட்ரம் நிர்வாகத்தில் ஒரு கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்படுகிறார்.[1][2]

மார்ட்டின் கூப்பர்
2010 இல் கூப்பர்
பிறப்புதிசம்பர் 26, 1928 (1928-12-26) (அகவை 95)
சிகாகோ, இலினொய், அமெரிக்கா
இருப்பிடம்டெல் மார், கலிபோர்னியா
தேசியம்அமெரிக்கர்
கல்விஇலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம்
பணிகண்டுபிடிப்பாளர்
தொழிலதிபர்
பணியகம்மோட்டோரோலா
நிறுவனர்
அறியப்படுவதுகையடக்க செல்லிடத் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்.
விருதுகள்மார்க்கோனி விருது (2013)
வலைத்தளம்
www.dynallc.com

மோட்டோரோலா நிறுவனத்தில் 1970 களில் பணியாற்றியபோது, கூப்பர் முதல் கையடக்க செல்லிடத் தொலைபேசியை 1973 இல் கண்டுபிடித்து 1983 ஆம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வந்தார்.[3][4] இவர் "செல்லிடத் தொலைபேசியின் தந்தை" என்று போற்றப்படுகிறார்.[5][6] மேலும்  ஒரு கையடக்க செல்லுலார் தொலைபேசி அழைப்பை பொதுமக்கள் முன்னிலையில் ஏற்படுத்திய வரலாற்றில் முதல் நபராகவும் இவர் கருதப்படுகிறார்.[7]

கல்வி

தொகு

உக்ரைனிய யூதக் குடியேறியவர்களுக்கு மார்ட்டின் பிறந்தார்.[8][9][10] இவர் 1950 ஆம் ஆண்டு இலினாய் தொழிநுட்பக் கழக்த்தில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்க கடற்படை சேர்க்கப்பட்டார், அங்கு அவர் கொரியப் போரின்போது ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரியாக பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு கூப்பர் ஐ.ஐ.டி.யில் இருந்து மின் பொறியியலில் பட்டம் பெற்றார், 2004 இல் ஐ.ஐ.டி.க்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் பணியாற்றுகிறார்.

 
கூப்பர் 2007 இல் ஒரு DynaTAC செல்போன் வைத்திருக்கும் காட்சி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_கூப்பர்&oldid=3351187" இலிருந்து மீள்விக்கப்பட்டது