மார்த்தாண்டம் மேம்பாலம்

மார்த்தாண்டம் மேம்பாலம் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இது கட்டப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

வரலாறுதொகு

மார்த்தாண்டத்தில் ஏற்பட்டுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். 19 ஜனவரி 2016 மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேம்பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.[1] மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காக 12 நவம்பர் 2018 அன்று திறக்கப்பட்டது. [2]

நீளமான இரும்பு பாலம்தொகு

தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு மேம்பாலம் அகும்.

பாலத்தின் வகைதொகு

தேசிய நெடுஞ்சாலை எண்.47 இல் வெட்டுவெந்நியில் குழித்துறை ஆற்றுப் பாலம் முடியும் இடத்தில் தொடங்கி மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை வரை 2.4 கி.மீட்டர் தொலைவுக்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு ரூ. 222 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் தமிழகத்தின் முதல் இரும்புப் பாலமாகும். இந்த மேம்பாலத்தில் 112 ராட்சத பில்லர்கள் (தூண்கள்) அமைக்கப்படுகின்றன. இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை.

சான்றுகள்தொகு