மார்த்தா கிறிஸ்டினா தியாஹு

மார்த்தா கிறிஸ்டினா தியாஹு (பிறப்பு: 1800 சனவரி 4  - இறப்பு: 1818 சனவரி 2) இவர் மலுக்கன் சுதந்திர போராளியும் மற்றும் இந்தோனேசியாவின் தேசிய கதாநாயகியுமாவார் .

மார்த்தா கிறிஸ்டினா தியாஹு
பிறப்பு(1800-01-04)4 சனவரி 1800
அபுபு, நுசாலத் தீவு, இடச்சு கிழக்கிந்தியா
இறப்பு2 சனவரி 1818(1818-01-02) (அகவை 17)
பண்டா கடல்
நினைவகங்கள்அம்பான், மலுக்கு மற்றும் அபுபுவில் சிலை
பணிகெரில்லா போராளி
செயற்பாட்டுக்
காலம்
1817
விருதுகள்இந்தோனேசியாவின் தேசிய கதாநாயகி

இராணுவத் தளபதிக்கு பிறந்த தியாஹு சிறு வயதிலிருந்தே இராணுவ விஷயங்களில் தீவிரமாக இருந்தார். இவர் தனது 17 வயதில் இடச்சு காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக பட்டிமுரா தலைமையிலான போரில் சேர்ந்தார். பல போர்களில் சண்டையிட்டார். 1817 அக்டோபரில் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், இவரது வயது காரணமாக விடுவிக்கப்பட்டார். பின்னர், தொடர்ந்து போராடினார். மீண்டும் கைது செய்யப்பட்டு அடிமைத் தொழிலாளியாக ஜாவாவுக்கு அனுப்பப்பட்ட இவர், வழியில் நோய்வாய்ப்பட்டு, சாப்பிடவோ, மருந்து எடுக்கவோ மறுத்து, பண்டா கடலில் ஒரு கப்பலில் இறந்தார்.

தியாஹு இந்தோனேசியாவின் தேசிய கதாநாயகியாக கருதப்படுகிறார். இவருக்கு அம்பொன் மற்றும் அபுபு என்ற இடங்களில் இரண்டு சிலைகள் எழுப்பி கௌரவிக்கப்பட்டார்.

சுயசரிதை தொகு

தியாஹு 1800 சனவரி 4 ஆம் தேதி மலுகுக்கனுக்கு அருகிலுள்ள நுசலாட் தீவில் உள்ள அபுபு கிராமத்தில் பிறந்தார். [1] இவரது தந்தை சோ உலுபூதி குலத்தைச் சேர்ந்த தளபதி பவுலஸ் தியாஹு என்பவராவார். [1] [2] குழந்தையாக இருந்தபோது இவரது தாயார் இறந்த பிறகு, தியாஹூ தனது தந்தையால் வளர்க்கப்பட்டார். [2] ஒரு குழந்தையாக, இவர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இவர் எங்கு சென்றாலும் தன் தந்தையைப் பின்தொடர்ந்தாள். சில சமயங்களில் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் அவருடன் சேர்ந்து கொண்டார். [2]

கொரில்லா போர் தொகு

1817ஆம் ஆண்டு தொடங்கி தியாஹு இடச்சு காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிரான கெரில்லா போரில் தனது தந்தையுடன் சேர்ந்து கொண்டார். [3] இவர்கள் பட்டிமுராவின் இராணுவத்தையும் ஆதரித்தனர். [4] இவர் பல போர்களைக் கண்டார். சப்பருவா தீவில் நடந்த ஒரு போரில், துருப்புக்கள் இடச்சு தளபதி ரிச்செமென்ட்டைக் கொன்றனர். அவருக்குப் பதிலாக தளபதியாக நியமிக்கப்பட்ட மேயரைக் காயப்படுத்தினர். [3] மற்றொரு போரில், தூர்ஸ்டீட் கோட்டையை எரிப்பதில் இவரும் இவரது படைகளும் வெற்றி பெற்றன. [2] போர்களின் போது, தனது வீரர்களுக்கு வெடிமருந்துகள் கிடிக்காதபோது இடச்சு துருப்புக்கள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் மற்ற கணக்குகளில் இவர்ஒரு ஈட்டியையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. [2] [3] வெர்முலென் கிரிங்கர் மலுக்குவில் இடச்சு இராணுவத்தை கைப்பற்றிய பிறகு, தியாஹு, இவரது தந்தை மற்றும் பட்டிமுரா ஆகியோர் அக்டோபர் 1817இல் கைது செய்யப்பட்டனர். [3]

சிறை தொகு

சிறைபிடிக்கப்படட்டு எச்.என்.எல்.எம்.எஸ் எவர்ட்சன் என்ற கப்பலில் நுசலாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தியாஹு, இவரது இளம் வயது காரணமாக தண்டிக்கப்படவில்லை.[3] இவரது தந்தை பெவர்விஜ்க் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். சில காலத்திற்குப் பிறகு, 1817இன் பிற்பகுதியில் தியாஹு விடுவிக்கப்பட்டார். [3] இவர் இடச்சுக்காரர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடினார். [2]

இறப்பு தொகு

1817 திசம்பரில் தியாஹு மற்றும் பல முன்னாள் கிளர்ச்சியாளர்கள் மீண்டும் பிடிபட்டனர். [3] கைப்பற்றப்பட்ட கெரில்லாக்கள் ஜாவாவுக்கு கொண்டு செல்ல எவர்ட்சனில் வைக்கப்பட்டன; அவை அங்குள்ள காபி தோட்டங்களில் அடிமை உழைப்பாக பயன்படுத்தப்பட்ட கப்பலாகும். [3] வழியில் தியாஹு நோய்வாய்ப்பட்டார். [3] மருந்து மற்றும் உணவை ஏற்க மறுத்த இவர், 1818 சனவரி 2, அன்று கப்பல் பண்டா கடலைக் கடக்கும்போது இறந்தார்; அந்த நாளின் பிற்பகுதியில் இவர் கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டாள் . [3] [2]

ஆளுமை தொகு

 
அம்பானில் உள்ள தியாகஹுவின் சிலை

இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, தியாஹு இந்தோனேசியாவின் தேசிய கதாநாயகி என்று அறிவிக்கப்பட்டார்; [3] ஜனவரி 2 மார்த்தா கிறிஸ்டினா தியாஹு தினமாக நியமிக்கப்பட்டது. [3] அன்று, மலுக்குவில் மக்கள் இவரது போராட்டத்தை கௌரவிக்கும் விதமாக பண்டா கடல் மீது மலர் இதழ்களை தூவுவார்கள் . [3] இருப்பினும், மே 15 அன்று பட்டிமுரா விழாவில் இவரை கௌரரவிப்பதை விட இந்த விழா சிறியதாகும். [3]

நினைவுச்சின்னங்கள் தொகு

தியாஹுவுக்கு பல நினைவுச்சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலுக்கு மாகாணத்தின் தலைநகரான அம்போனில், 8-மீட்டர் (26 அடி) ஒரு ஈட்டியை வைத்திருக்கும் உயரமான சிலை 1977இல் அமைக்கப்பட்டது; இது பண்டா கடலைக் கண்டும் காணாத வகையில் கரங்பஞ்சாங்கில் நிற்கிறது. [3] அபுபுவில், இவரது சிலை ஒரு ஈட்டியை வைத்திருப்பது போன்று, இவரது மரணத்தின் 190 வது ஆண்டு நினைவு நாளில் நிறுவப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. [2] [3] இவரின் பெயரிடப்பட்ட பல பொருட்களும் உள்ளன. அவற்றில் கரங்பஞ்சாங், அம்போன், மற்றும் ஒரு போர்க்கப்பலான, கே.ஆர்.ஐ மார்த்தா கிறிஸ்டினா தியாஹு போன்றவை . [3]

ஜகார்த்தாவில் உள்ள மலுக்கன்களுக்கான ஒரு சமூக அமைப்பு மற்றும் அம்போனில் உள்ள ஒரு மகளிர் பத்திரிகை உள்ளிட்ட பிற அமைப்புகள் இவரது பெயரை வைத்துள்ளன. [3]

குறிப்புகள் தொகு

நூலியல் தொகு

  • Alaidrus, Syarivah (27 April 2010). "Martha Christina Si Pemberani dari Timur" [Martha Christina, the Brave One from the East]. Kompas (in Indonesian). Jakarta. Archived from the original on 27 December 2011. பார்க்கப்பட்ட நாள் 27 December 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  • Azizah, Jiz (2011) (in Indonesian). Wanita-Wanita Perkasa dari Jawa. Bantul: IN AzNa Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-979-3194-96-7. 
  • Tunny, Azis (27 April 2008). "Martha Christina Tiahahu: The 'kabaressi' heroine of Maluku". The Jakarta Post. Jakarta. Archived from the original on 27 December 2011. பார்க்கப்பட்ட நாள் 27 December 2011.