மாலிகாபாத்

மாலிகாபாத் (Malihabad) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சியாகும். இது வட இந்தியாவில் இதன் மாம்பழங்களுக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இங்கு வளர்க்கப்படும் பல்வேறு வகையான மாம்பழங்களில், துசேரி மிகவும் பிரபலமான வகையாகும். துசேரியைத் தவிர, சௌசா, பாச்லி, லக்னோவா, ஜௌகரி, சபெடா போன்ற மாம்பழங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.

மாலிகாபாத்
Town
மாலிகாபாத் is located in உத்தரப் பிரதேசம்
மாலிகாபாத்
மாலிகாபாத்
Location in Uttar Pradesh, India
ஆள்கூறுகள்: 26°56′N 80°43′E / 26.94°N 80.72°E / 26.94; 80.72
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்லக்னோ
ஏற்றம்
128 m (420 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்17,818
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • கூடுதல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUP-32

நிலவியல்

தொகு

மாலிகாபாத் 6.92 ° வடக்கிலும் 80.72 ° கிழக்கிலும் அமைந்துள்ளது [1] இது சராசரியாக 128 மீட்டர் (419 அடி) உயரத்தில் உள்ளது .மாலிகாபாத்தின் முக்கிய பகுதிகள் மிர்சகஞ்ச், சையத்வாரா, சௌத்ரானா மற்றும் கேவல்கார். மாலிகாபாத்தின் முக்கிய மக்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அநேகமாக 187 கிராமங்களும் 67 கிராமப் பஞ்சாயத்துகளும் மாலிகாபாத் வட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

புள்ளிவிவரங்கள்

தொகு

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] மாலிகாபாத்தின் மக்கள் தொகை 15,806 பேர் என்ற அளவில் இருந்தது. ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47%. மாலிகாபாத்தில் சராசரி கல்வியறிவு விகிதம் 52%, இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 59%, பெண் கல்வியறிவு 45%. மாலிகாபாத்தில், மக்கள் தொகையில் 16% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

பொருளாதாரம்

தொகு

தசேரி மாம்பழ தோட்டங்கள் இப்பகுதியின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். மாம்பழங்கள் பல அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தசேரி மாம்பழம் மிகவும் சுவையாகவும் அதன் இனிப்பு மற்றும் மென்மையான கூழுக்காகவும் அறியப்படுகிறது.

திரைப்படங்களில்

தொகு

பிலிம்பேர் விருது வென்றதும், (1979) இந்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றதுமான (1978), ஜூனூன் என்ற இந்தித்திரைப்படம் பெரும்பாலும் மாலிகாபாத்தின் மகால்களில் படமாக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு
  • கௌசு முகமது கான், விளையாட்டு வீரர்
  • ஜோசு மாலிகாபாடி, எழுத்தாளர், புரட்சிகர கவிஞர்
  • கலீம் உல்லா கான்
  • பாஸ்கர் மாலிகபாடி, எழுத்தாளர், இந்தி கவிஞர்
  • அருண் மாலிகாபாடி, பொது நபர், மாலிகாபாடி கவிஞர்
  • அஜீஸ் அசன் கான் - பொது நபர், அரசியல்வாதி
  • அப்ரார் அசன் கான் அசார் மாலிகாபாடி - கவிஞர், எழுத்தாளர்

குறிப்புகள்

தொகு
  1. it has tropical monsoon climate (am),it has warm climate all year round. Falling Rain Genomics, Inc - Malihabad
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிகாபாத்&oldid=3008588" இலிருந்து மீள்விக்கப்பட்டது