மாலினி அவஸ்தி
மாலினி அவஸ்தி (Malini Awasthi), (பிறப்பு: 1967 பிப்ரவரி 11) ஓர் இந்திய நாட்டுப்புற பாடகி ஆவார்.[1][2] இவர் இந்தி மற்றும் அவதி, புண்தேலி கண்டி மற்றும் போச்புரி போன்ற தொடர்புடைய மொழிகளில் பாடுகிறார். இவர் தும்ரி மற்றும் கஜ்ரி ஆகியவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.[3] இந்திய அரசு 2016 ஆம் ஆண்டில் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது.[4]
மாலினி அவஸ்தி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1967 கன்னோசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
பிறப்பிடம் | இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்திய நாட்டுப்புற இசை |
தொழில்(கள்) | நாட்டுப்புறப் பாடகர் |
இசைத்துறையில் | 31 வருடங்கள் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமாலினி அவஸ்தி உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னோசி என்னும் இடத்தில் பிறந்தார். இவர், இலக்னோவின் பட்கண்டே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் மற்றும் இந்துஸ்தானி இசையில் தங்கப்பதக்கம் வென்றவரும் ஆவார்.[5] மேலும், இலக்னோ பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றார். இதில் இடைக்கால மற்றும் நவீன இந்திய கட்டிடக்கலையை சிறப்பு பாடமாக பயின்று நிபுணத்துவம் பெற்றார். இவர், பழம்பெரும் இந்துஸ்தானி இசைப் பாடகரான காந்தா பந்த் மற்றும் பத்ம விபூசண் விருது பெற்றுள்ள பனாரசு கரானாவைச் சேர்ந்த விதுசி கிரிஜா தேவியின் மாணவி ஆவார். இவர், மூத்த இந்திய ஆட்சிப் பணியாளரான அவனிஷ் அவஸ்தியை (உத்தரபிரதேசம்: 1987) திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் தற்போது உத்தரபிரதேச அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தொழில்
தொகுமாலினி அவஸ்தி பிரபலமான பாரம்பரிய இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ராவில் பங்களிக்கும் ஒரு வழக்கமான கலைஞர் ஆவார்.[6] அவர் அதிக சுருதியில் பாடலைப் பாடும் குரல் வளம் கொண்டவர். துமரி, தாரே ரஹோ பாங்கே ஷியாம் என்ற படத்திற்கு பாடியதனால் பிரபலமாக அறியப்படுகிறார்.
இவர், என்.டி.டி.வி இமேஜினின் 'ஜூனூன்' என்றத் தொடர் நிகழ்ச்சிக்காக, தொலைக்காட்சியில் பங்கேற்றார். மேலும், 2012 மற்றும் 2014இல் நடைபெற்ற உத்திரப் பிரதேச தேர்தல்களுக்காக, தேர்தல் ஆணையத்தால் இவர் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார்.[7]
அனு மாலிக் இசையமைத்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த, தம் லகா கே ஹைஷா என்கிற இந்தி மொழித் திரைப்படத்தில் "சுந்தர் சுஷீல்" எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
கல்வி கௌரவங்கள்
தொகு- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரத் ஆத்யன் கேந்திரத்திற்கான நூற்றாண்டு தலைவர் பேராசிரியர் [8] கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டது.
கலாச்சார நிகழ்ச்சிகள்
தொகுஇவர், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கலை நிகழ்ச்சிகளில் பங்களித்துள்ளார்.
தேசிய நிகழ்ச்சிகள்
தொகுஉத்தரப்பிரதேசத்தில் தும்ரி-திருவிழா மற்றும் ரக்-ரங்-விழா, தாஜ்-மகோத்சவம், கங்கா- மகோத்சவம், லக்னோ-திருவிழா, புத்த-மகோத்சவம், இராமாயண-மேளா, கஜ்ரி-மேளா, கபீர்-உத்சவம் போன்றவை.
ராஜஸ்தானில் சுருதி-மண்டல்-சமரோ, கும்பல்-கார்ட்-விழா, டீஜ்- விழா-ஜெய்ப்பூர்.
சூரஜ்குண்ட்-கைத்தறி-மேளா மற்றும் பஞ்சாப் மற்றும் ஹயானாவில் உள்ள பிஞ்சூரில் பாரம்பரியத் திருவிழா ஆகியன.
சர்வதேச நிகழ்ச்சிகள்
தொகுடிரினிடாட், 2017 இல் பிரவாசி திவாஸ் [9]
மொரிட்டஸில் இந்திய விழா, 2015 [10]
2011இல், பிஜியில், கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பின் 40 வது, ஆண்டு விழா.[11]
சுதந்திர தின கொண்டாட்டம் ஹூஸ்டன், அமெரிக்கா, 2004
பாக்கித்தானில் கலாச்சார செயல்திறன்; 2007 [12]
தென் வங்கி மையம், லண்டன், 2011இல் கலாச்சார செயல்திறன் [13]
நெதர்லாந்தில் இந்திய திருவிழா கொண்டாட்டம்: 2002, 2003, 2015 மற்றும் 2016 [14]
விஸ்வா போஜ்புரி சம்மேளன், மொரீசியஸ்; 2000, 2004, மற்றும் 2016.
பிலடெல்பியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் கலாச்சார இசை நிகழ்ச்சி; 2016
விருதுகள்
தொகுபத்மசிறீ விருது; (2016).[15]
யஷ் பாரதி விருது - உத்தரபிரதேச அரசு; 2006 [16]
மற்றும் உத்தரபிரதேச சங்கீத நாடக அகாதமி, தேசிய சங்கீத நாடக அகாதமி உறுப்பினர் கௌரவமும் பெற்றுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Malini Awasthi mesmerises audience". Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-20.
- ↑ "It's the villages where folk music is disappearing faster". 2011-09-19. http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/Its-the-villages-where-folk-music-is-disappearing-faster/articleshow/10032647.cms.
- ↑ "Body Text Thumri, Kajri mark final day of music festival". 2011-09-11 இம் மூலத்தில் இருந்து 2012-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120927183639/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-11/allahabad/30141658_1_raga-braj-tabla.
- ↑ "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 February 2016.
- ↑ "Low at Bhatkhande". The Times Of India. 2009-09-09 இம் மூலத்தில் இருந்து 2012-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707104919/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-09/lucknow/28081491_1_classical-music-institute-ugc.
- ↑ Tripathi, Shailaja (2010-02-25). "Hues of Hori". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/article113443.ece.
- ↑ "Election Commission 'sveeps' polls in first phase". The Times Of India. 2012-02-09. http://economictimes.indiatimes.com/news/politics/nation/up-assembly-elections-2012-election-commission-sveeps-polls-in-first-phase/articleshow/11819521.cms.
- ↑ http://www.bhu.ac.in/arts/bak/teaching.php
- ↑ https://www.hcipos.gov.in/event.php
- ↑ "Malini Awasthi Enthrals The Audience". Mauritius Times. 21 December 2015. http://www.mauritiustimes.com/mt/sarita-boodhoo-69.
- ↑ http://www.eternalmewar.in/media/newsletter/templates/2019/nl212/mmfaa2019/index.htm
- ↑ http://www.newindianexpress.com/thesundaystandard/2019/jun/09/berlin-calling-for-malini-awasthi-1987935.html
- ↑ https://www.telegraph.co.uk/culture/music/worldfolkandjazz/8437627/Mystical-moment-please-switch-off-your-iPhone.html
- ↑ https://www.shethepeople.tv/news/sonal-mansingh-malini-awasthi-akademi-awardees
- ↑ https://www.bhaskar.com/news/UP-GOR-malini-awasthi-got-padma-shri-award-5285404-PHO.html
- ↑ https://www.hindustantimes.com/india/yash-bharti-to-13-personalities/story-6qSdMSJNYsBOjtntVAK6dO.html
வெளி இணைப்புகள்
தொகு- Official site பரணிடப்பட்டது 2013-09-26 at the வந்தவழி இயந்திரம்