மாலைத்தீவுகள் நாட்டுப்பண்
கவ்மீ சலாம் ( Qaumii Salaam ) (திவெயி: ޤައުމީ ސަލާމް; National Salute) என்பது மாலைத்தீவிகளின் நாட்டுப்பண் ஆகும். இதன் வரிகள் முகமது ஜமீல் தீதி என்பவரால் 1948 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இதன் மெல்லிசையை அமைத்தவர் இலங்கையைச் சேர்ந்த இசை மேதை பண்டிதர் டபிள்யூ. டி. அமரதேவ[1] 1972 இல் இசையமைத்தார்.[2]
ஆங்கிலம்: National Salute | |
---|---|
ޤައުމީ ސަލާމް | |
மாலத்தீவுகளின் சின்னம் | |
மாலைத்தீவுகள் தேசியம் கீதம் | |
இயற்றியவர் | முகமது ஜமீல் தீதி, 1948 |
இசை | டபிள்யூ. டி. அமரதேவ, 1972 |
இசை மாதிரி | |
கவ்மீ சலாம் (இசைக்கருவியில்) |
வரலாறு
தொகு1948க்கு முன்பு வரிகளற்று வெற்று இசையே நாட்டுப்பண்ணாக மாலைத்தீவில் இசைக்கப்பட்டது. சலாமாதி ராஜாங்க இசைக்குழுவால் அரசு விழாக்களின்போது மட்டும் கீதம் இசைக்கப்பட்டுவந்தது. பின்னர்தான் சட்ட அமைச்சராகவும், நாட்டின் தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தவரான ஷேக் முகமது ஜமீல் தீதியால் இயற்றப்பட்ட பாடல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டு இதற்கு புதிய இசைவடிவம் தரப்பட்டது. இது நீண்ட பாடலாக இருந்தாலும், முதல் ஆறு வரிகள் மட்டுமே இசைக்கப்படுகின்றன. மாலத்தீவின் தேசிய கீதம் சுமார் 100 விநாடிகள் வரை நீடிக்கும். [3]
வரிகள்
தொகுமாலைத்தீவு மொழி | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு |
---|---|---|
ޤައުމީ މިއެކުވެރިކަން މަތީ ތިބެގެން ކުރީމެ ސަލާމް |
க்கௌவ் மி இகுவேரிகன் மதீ திபேகென் குரீமெ சலாம். |
நாட்டு ஒற்றுமையால் நினக்கு வணக்கம். |
- பொதுவாக, பாடும் போது மட்டும் முதல் மூன்று சரணங்கள் படிக்க வேண்டும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ R. K. Radhakrishnan (28 June 2011). "India honours doyen of modern Sinhala music". The Hindu (Colombo). http://www.thehindu.com/news/international/article2141369.ece. பார்த்த நாள்: 25 April 2013.
- ↑ "Maldives". National Anthems. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (29 சூன் 2016). "நாட்டுக்கொரு பாட்டு- 12: நீதிபதியால் வந்த தேசிய கீதம்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2016.