மால்டா அருங்காட்சியகம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள அருங்காட்சியகம்

மால்டா அருங்காட்சியகம் (Malda Museum) என்பது மேற்கு வங்க மாநிலத்தின் தொல்லியல் இயக்குநரகத்தின் கீழ் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் 1937 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது [2] மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள இங்கிலீசு பசாரின் சுபாங்கர் பந்த் சாலையில் அமைந்துள்ளது.

மால்டா அருங்காட்சியகம்
Malda Museum
Map
நிறுவப்பட்டது1937[1]
அமைவிடம்மால்டா, மேற்கு வங்காளம், மேற்கு வங்காளம்
வகைதொல்லியல் அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் ஆரம்பத்தில் மாவட்டத்தில் காணப்படும் வரலாற்று தொல்பொருட்களின் தொகுப்பாக மால்டா மாவட்ட நூலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் இதன் அருகில் உள்ள ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மாநில தொல்லியல் இயக்குநரகத்தின் கீழ் அதன் சொந்த உரிமையில் ஓர் அருங்காட்சியகத்தின் தகுதிநிலை வழங்கப்பட்டது.

மால்டா ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியின் போது தோன்றிய போதிலும், 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இப்பகுதி வங்காளத்தின் அதிகார மையமாக இருந்தது. அருகிலுள்ள கௌர் மற்றும் பாண்டுவா நகரங்கள் முழு வங்காளப் பகுதியின் தலைநகரங்களாக செயல்பட்டன. அருங்காட்சியகம், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு இப்பகுதியின் தொல்பொருள், மானுடவியல் மற்றும் வரலாற்று பாரம்பரியம் போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றது.[3] அருங்காட்சியகத்தில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிற்பங்கள், சிலைகள், கையால் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் , பண்டைய இந்தியக் கல்வெட்டுகள் மற்றும் பிற கலைப்பொருட்களின் சிறந்த மாதிரிகள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Gita Dutta, Mrinal Dutta (1990). Vraman Sangi: India Travel Companion, 1991-92. Asia Publishing Company. https://books.google.com/books?id=dSxWAAAAYAAJ. 
  2. Robert Bradnock, Roma Bradnock (2001). India Handbook. Trade & Travel Publications. https://books.google.com/books?id=EB0wAQAAIAAJ. 
  3. Footprint India. Footprint Handbooks. 2004. https://books.google.com/books?id=NNsvAQAAIAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டா_அருங்காட்சியகம்&oldid=3327529" இலிருந்து மீள்விக்கப்பட்டது